சொன்னதை மீறி தினகரனை சந்திக்கும் அமைச்சர்கள் யார் யார்.. ரகசிய லிஸ்ட் ரெடி.. சிக்கிய விசுவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் தினகரனை சந்தித்து பேசி வரும் அமைச்சர்களின் பட்டியலை முதல்வர் பழனிச்சாமி உளவுத் துறை மூலமாக பெற்றுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக அணிகள் பிரிந்து சண்டையிட்டு வருகிறது. இதனிடையே இரண்டு அணிகளும் சேர சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் டீம் கட்டுப்பாடு போட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி இருப்பதாகக் கூறிய அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தினகரன் செக்

தினகரன் செக்

இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். அவர் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.

நீக்கியது நீக்கியதுதான்

நீக்கியது நீக்கியதுதான்

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஜெயகுமார் அறையில் 20 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தினகரனை விலக்கி வைப்பது என்ற முடிவிலிருந்து பின்வாங்கு்ம பேச்சுக்கை இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், கட்சியினர் யாரும் தினகரனை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் வேண்டுகோள்

இதே போன்று கொஞ்ச காலத்திற்கு அமைச்சர்கள் யாரும் தினகரனை சந்திக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமியும் வலியுறுத்தினார். சசிகலா மற்றும் தினகரனை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

அமைச்சர் ரகசிய சந்திப்பு

அமைச்சர் ரகசிய சந்திப்பு

ஆனால், முதல்வரின் பேச்சை அமைச்சர்கள் யாரும் கேட்பதாக இல்லை. அமைச்சர்கள் பலர் தினகரனை சந்தித்து பேசிவிட்டு வருகின்றனர். அவர்கள் அரசாங்க காரில் சென்றால் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக வேறு வாகனங்களில் தினகரன் வீட்டிற்கு சென்று திரும்புகின்றனர்.

ரகசிய லிஸ்ட்

ரகசிய லிஸ்ட்

இந்நிலையில், தினகரன் வீட்டிற்கு எந்தெந்த அமைச்சர்கள் சென்றார்கள் என்ற பெயர் பட்டியலை உளவுத் துறை முதல்வர் பழனிச்சாமிக்கு கொடுத்துள்ளதாம். தான் சொன்ன பேச்சை கேட்காத அமைச்சர்கள் தினகரனை ரகசியமாக சந்தித்து பேசி வருவதால் பழனிச்சாமி கடுப்பில் இருக்கிறாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Palanisamy got list of ministers who met TTV Dinakaran.
Please Wait while comments are loading...