For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் உயரிய பதவியையும், தமிழக அரசில் உயரிய பதவியையும் நீண்ட காலமாக எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். இரண்டுமே அவரிடம் நெருங்காமல் நீண்ட காலமாக போக்குக் காட்டி வருகின்றன. இந்த நிலையில் முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டசபையில் உறுப்பினராக, துணை முதல்வராக, அமைச்சராக வலம் வந்துள்ள ஸ்டாலின் முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராக உலா வரப் போகிறார்.

அதை விட முக்கியமாக இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் திகழப் போவதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாகவே உள்ளன. அத்தனை பேரின் கண்களும், ஜெயலலிதாவை விட ஸ்டாலின் மீதுதான் அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்க்கட்சி திமுக

எதிர்க்கட்சி திமுக

சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு 2வது இடமே கிடைத்தது. இதனால் அது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம்

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம்

இதையடுத்து அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அங்கீகாரத்தை சபாநாயகர் தனபால் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். ஸ்டாலின், அமைச்சருக்குரிய அந்தஸ்துடன் வலம் வருவார். அவருக்கு அரசு கொறடாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அந்தச் சலுகைகள் அனைத்தும் அளிக்கப்படும். அரசு வீடு, வாகனம், இரண்டு ஓட்டுநர்கள், தனி உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். மேலும், சட்டசபை உறுப்பினருக்கு அளிக்கப்படும் மாத ஊதியமான (படிகள் உள்பட) ரூ.55 ஆயிரத்தை விட கூடுதலாக சம்பளமும் கிடைக்கும்.

18வது எதிர்க்கட்சித் தலைவர்

18வது எதிர்க்கட்சித் தலைவர்

தமிழக சட்டசபையின் 18வது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் நாகி ரெட்டி. அவரைத் தொடர்ந்து பி.ராமமூர்த்தி, ராமசாமி முதலியார், வி.ஆர். நெடுஞ்செழியன், கருத்திருமன், கருணாரநிதி, ஹாஜா ஷெரீப், உ.சுப்பிரமணியம், ஜெயலலிதா, எஸ்.ஆர். ராதா, ஜி.கே.மூப்பனார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன், க. அன்பழகன், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்த் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயல்பட்டுள்ளனர்.

பாதியிலேயே பதவியை இழந்தவர் விஜயகாந்த்

பாதியிலேயே பதவியை இழந்தவர் விஜயகாந்த்

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை இழந்த பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு. கடந்த சட்டசபையின் இறுதிக் கட்டத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார்.

வகித்த பதவிகள்

வகித்த பதவிகள்

மு.க.ஸ்டாலின் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் பல பதவிகளை அலங்கரித்துள்ளார். திமுக இளைஞர் அணி அமைப்பாளர், இளைஞர் அணி மாநிலச் செயலாளர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், மேயர், துணை முதல்வர், திமுக துணைப் பொதுச் செயலாளர், திமுக பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார் ஸ்டாலின். தற்போது முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

முதல்வர் பதவியைத் தவிர அதைச் சுற்றியுள்ள அத்தனை பதவிகளையும் கிட்டத்தட்ட ஸ்டாலின் வகித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியிடம் ஆசி

கருணாநிதியிடம் ஆசி

எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் எம்.எல்.ஏ. பொன்முடி, எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

English summary
DMK treasurer MK Stalin has becomes the main opposition leader for the first time in his political life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X