For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜாடிக்கு ஏற்ற மூடி போல் மோடிக்கு ஏற்ற எடப்பாடி: ஸ்டாலின் விளாசல்
தஞ்சை: ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி, மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்பது புதுமொழி என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினர்.

இன்று மூன்றாம் நாள் பயணத்தின்போது புத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி. மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்பது புதுமொழி.
ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அகராதியை பார்த்தால் கூட அர்த்தம் புரியும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தூங்குவது போல் நடிக்கிறது என்றார் மு.க.ஸ்டாலின்