பறந்தாலும் விடமாட்டாங்க போல.. பலூன்களால் மோடியின் ஹெலிகாப்டர் வழித்தடம் மாற்றப்பட்டது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

  சென்னை: மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்க விடப்பட்ட கறுப்பு நிற பலூன்களால், அவர் செல்ல இருக்கும் ஹெலிகாப்டரின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வந்ததை எதிர்க்கும் விதத்தில் கறுப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது.

  சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.

  சென்னை விமான நிலையம் மூலம் மோடி மாமல்லபுரத்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள்.

  பலூன்

  பலூன்

  காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை காரணமாக கறுப்பு நிற பலூன்களை பறக்க விட்டு போராடி வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதே போல கறுப்பு ஆடை அணிந்தும் போராடி வருகிறார்கள்.

  உடைப்பு

  காலையில் சென்னை போலீஸ் கறுப்பு நிற பலூன்களை தேடி தேடி உடைத்து வந்தனர். இதற்காக சென்னை போலீசில் தற்காலிகமாக சிலர் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உதவியுடன் சென்னையில் கறுப்பு பலூன்களை கொண்டு செல்பவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு பலூன்கள் உடைக்கப்படுகிறது.

  ஆனாலும்

  ஆனால் இதன் பின்தான் இந்த பலூன் போராட்டம் தீவிரமானது. சிறிய பலூன்கள் பறக்கவிட்டது போய் பெரிய பெரிய பலூன்கள் பறக்க விடப்பட்டது. திமுக கட்சி, மிகப்பெரிய பலூனை வானத்தில் பறக்க விட்டு, கறுப்பு நிற எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதை போலீஸ் தடுக்க முடியாமல் திணறியது.

  வழித்தடம் மாற்றம்

  வானத்தில் தற்போது நிறைய கறுப்பு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் ஹெலிகாப்டரில் செல்ல இருக்கும் மோடிக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஹெலிகாப்டர் பாதையை இது மறைக்கும் என்பதால், ஹெலிகாப்டரில் வழித்தடம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. கொஞ்சம் புறநகரில் சுற்றி பின் சென்னை விமானம் நிலையம் செல்ல உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai police burst balloons amidst Modi's visit to Chennai. People opposing Modi visit by sending black balloons. Modi's helicopter route changed due to Tamil's balloon protest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற