For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: மோடி

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் முடிவை மக்கள் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அவைகளை வங்கிகள் தபால் நிலையங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30ம்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 100, 50 ரூபாய் இல்லாதவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

Modi thank to people

இதனிடையே வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ரூபாய் நோட்டு குறித்த மத்திய அரசின் முடிவை மக்கள் வரவேற்றுள்ளனர். மக்கள் தங்களது சிரமத்தை பொறுத்துக்கொண்டு பொறுமையாகவும், வரிசையாகவும் நின்று புதிய நோட்டுகளை வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

பழைய பணத்தை மாற்றுவதற்கு வயதானவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வது மகிழ்ச்சி. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊழலற்ற வளர்ச்சியை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்துள்ளார்.

English summary
So happy to learn that citizens are expressing their gratitude to bankers & getting notes exchanged in a very patient & orderly manner, pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X