• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில வெள்ளம் ஒரு பக்கம்... பள்ளம் ஒரு பக்கம்... எப்படிப்பா ரோட்ல போறது?

By Mayura Akilan
|

சென்னை: மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருக்க நீச்சல் அடித்தாவது ஆபிஸ் போய்விடலாம் என்று வாகனத்தை இயக்குபவர்களுக்கு சென்னையில் பிரதான சாலைகளில் உருவாகியுள்ள ஆளை விழுங்கும் பள்ளங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பள்ளங்கள் விழுந்த சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் ஒருபுறம் பீதி அடைந்துள்ள நிலையில், இதற்கான உரிய காரணம் தெரியாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதில் போக்குவரத்து போலீசாரின் பாடுதான் பெரும்பாடாக உள்ளது.

வாகனத்தை வெளியே எடுத்தாலே எந்தப்பக்கம் போனாலும் பாத்து போங்க வெள்ளமாயிருக்கு என்று அட்வைஸ் செய்து அனுப்பிவைக்கின்றனர். சாலையில் இறங்கினாலே நலம் விரும்பிகள் பலரும் எங்கு வெள்ளம் அதிகமாக இருக்கிறது, டிராபிக் இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்போதோ பள்ளம் உருவான கதையை கூறி போக்குவரத்து மாற்றிவிடப்பட்ட பகுதிகளையும் பட்டியலிடுகின்றனர். கார், இருசக்கர வானகத்தை பயன்படுத்துவதை விட இனி கால்நடையாகவே போய்வரலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பெரும்பாலான சென்னைவாசிகள்.

வடகிழக்கு பருவமழை

சென்னையில் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட மிக அதிகமாக கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் மட்டும் நவம்பர் மாதம் 114 செ.மீ மழை பெய்துள்ளது. நான்குநாள் இடைவெளிவிட்டு மீண்டும் வெளுத்து வாங்குகிறது. இதனால் வடிந்த வெள்ளநீர் மீண்டும் சாலைகளில் தேங்கத் தொடங்கியுள்ளது.

மரண பள்ளங்கள்

வெள்ளம் தேங்கியது ஒருபுறம் இருக்க மழையால் குண்டும் குழியுமான சாலைகளில் மக்கள் பலரும் சவாலான பயணங்கள்
மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் இருந்து சென்னைவாசிகள் மீள்வதற்குள், நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் உருவாகி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளன.

எங்கெங்கு பள்ளங்கள்

எங்கெங்கு பள்ளங்கள்

மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலை; கபாலீசுவரர் கோவில் குளம் எதிரில்; மந்தைவெளி, தேவநாதன் சாலை; டி.டி.கே., சாலை- அம்புஜம்பாள் தெரு சந்திப்பு; வள்ளுவர் கோட்டம், லேக் ஏரியா, 1வது பிரதான சாலை; வேளச்சேரி, தரமணி சாலை; வளசரவாக்கம், சின்ன போரூர், அண்ணா சாலை என, பள்ளம் ஏற்பட்ட சாலைகளின் பட்டியல் நீள்கிறது. இந்த சாலைகளில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதைகுழிகள்

புதைகுழிகள்

சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் இடையே ஒருங்கிணைப்பு இன்றி, சாலைகள், பாதாள சாக்கடை பணிகள் நடந்ததால், பல இடங்களில் புதை குழிகள் ஏற்பட்டுள்ளன. காந்தி மண்டபம் அருகே மத்தியகைலாஷ் சாலையின் நடுவில் 15 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்திற்கு காரணம்

பள்ளத்திற்கு காரணம்

சென்னையில் பெரும்பாலான பகுதிகள், 40 ஆண்டுகளில், 8 அடி வரை மண் கொட்டி மேம்படுத்தப்பட்டவை. இவ்வாறு வெளியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் மண், முறையாக இறுக்கம் அடைய, 30 ஆண்டுகள் ஆகும்.
அதிக மழையால், மண்ணில் ஈரத்தன்மை அதிகரிக்கும் போது இறுக்கம் குறைவான பகுதியில் மண் உள்வாங்கும். இது, இயல்பான நிகழ்வு என்றாலும் அந்த இடத்தின் பயன்பாட்டை பொறுத்து பாதிப்பின் தாக்கம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உறுதியான அஸ்திவாரம் இல்லை

சாலைகளில் மட்டுமல்லாது கட்டடங்கள் இருக்கும் பகுதியிலும் இது போன்று மண் இறங்கும் நிகழ்வு நடக்கும். அது, கட்டடத்தின் முக்கியமான பகுதியாக இருந்தால் பாதிப்பு தெரியும்; உட்புற பகுதியாக இருந்தால் பாதிப்பு தெரியாது
பெரிய கட்டுமான திட்டங்களுக்கு பாறை மட்டத்திலும், சாதாரண கட்டடங்களுக்கு உறுதியான மண் இருக்கும் தளத்தில் இருந்தும் அஸ்திவாரம் அமைத்தால், கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

படு மோசமான சாலைகள்

படு மோசமான சாலைகள்

தென் சென்னையில் அண்ணாசாலை, டிடிகே சாலை, கடற்கரை காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் அடையாறு உட்பகுதிகளில் உள்ள சாலைகள், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தும் பள்ளங்கள்

நெல்சன் மாணிக்கம் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, திருமலைபிள்ளை சாலை, ரங்கராஜபுரம், விருகம்பாக்கம் சாலை, கே.கே.நகர் பிரதான சாலை, எழும்பூர், பெரம்பூர் பேரக்ஸ், ஜமாலியா, மூலக்கடை, வியாசர்பாடி சாலைகள், வண்ணாரப்பேட்டை, எண்ணூர் பிரதான சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் மழைக்கால பள்ளங்கள் அச்சுறுத்துகின்றனர். சாலைகளில் உள்ள பள்ளங்கள் தவிர தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் மரண பள்ளங்களாக மாறி பலரை விபத்தில் சிக்கவைத்துள்ளது என்பதுதான் சோகம்.

ரோட்ல போறப்ப பாத்து போங்கப்பு... வெள்ளமும், பள்ளமும் ஆளை விழுங்க காத்துட்டு இருக்கு!.

English summary
Poor quality of road laying in Chennai has always been a matter of concern for residents in Chennai and it was exposed thoroughly during the recent rains. Roads have begun to cave in on important stretches in different places, not only throwing traffic out of gear, but has caused fear among motorists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X