தாய் அன்புக்கு மரணம் கிடையாது.. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகின் மொத்த பாசமும் அடங்கியுள்ளது. அந்த தாய் அன்புக்கு இறப்பு என்பதே கிடையாது என்பதை நெஞ்சை நெகிழச் செய்யும் வகையில் சொல்கிறது இந்த குட்டி வீடியோ. சமூக வலைத்தளத்தில் கண்ணில்பட்ட இந்த வீடியோவின் காட்சி இப்படியாக விரிகிறது..

இளம் ஜோடி பயணிக்கும் காரை வழிமறிக்கிறார் ஒரு பெண். தனது குழந்தை விபத்துக்கான காரில் சிக்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளதாகவும், கார் கதவை திறக்க முடியவில்லை என்றும் அவர் கூறி உதவிக்கு அழைக்கிறார்.

Mother's love is immortal, this viral video explains with touching scene

ஓடிச் சென்ற அந்த இளைஞர் கஷ்டப்பட்டு கார் கதவை திறந்து அந்த சிறுமியை பத்திரமாக மீட்டு வெளியே எடுக்கிறார். இதன்பிறகுதான் நெஞ்சை உருக்கும் அந்த முக்கிய கட்டம். காரின் முன் கதவையயும் திறக்கும் இளைஞருக்கு காத்திருக்கிறது நெகிழச் செய்யும் அனுபவம். தாய் அன்புக்கு மரணமே கிடையாது என்ற எழுத்துக்கள் மின்னிட காணொலி நிறைவுறுகிறது. பாருங்கள்.. உங்கள் இதயம் ஒரு நிமிடம் நெகிழ்ந்து இயல்புக்கு திரும்பும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mother's love is immortal, this video explains with touching scene which is going viral in social media.
Please Wait while comments are loading...