For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குமூலம் திருத்தம்- பேரறிவாளனை விடுதலை செய்க: தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

Mother seeks Perarivalan’s release
சென்னை: ராஜிவ் வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தி தூக்கு தண்டனை விதிக்க காரணமாக இருந்தேன் என்று சிபிஐ அதிகாரி ஒப்புக் கொண்டதால் அவரை உடனே சிறையில் இருந்து விடுதலை செயய் வேண்டும் என்று தாயார் அற்புதம் அம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜிவ் வழக்கில் சிபிஐ அதிகாரியாக இருந்த தியாகராஜன், தாமே பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் ஆனால் பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்ததாகவும் அதனாலேயே அவருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்திருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியே தாம் திருத்தி எழுதியதை ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம் அம்மாள் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் அவர் மனு ஒன்றையும் இன்று கொடுத்துள்ளார்.

English summary
Arputhammal, mother of Perarivalan, a convict facing the death sentence in the Rajiv Gandhi assassination case, has sought his immediate release. Ms. Arputhammal appealed to Tamil Nadu Chief Minister Jayalalithaa to intervene and do him justice. Since a crucial point was not recorded in the confessional statement, the conviction became legally untenable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X