For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 21ல் திறப்பு: பொது மக்களுக்கு ஒப்படைக்கிறார் ஜெ.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Multi Super Speciality Hosp Gets Set for Opening, Trial Run to Begin Today
சென்னை: புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா 21-ந் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கிறார்.

சென்னையில் ஓமந்தூரர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த மருத்துவமனை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செயல்பாட்டிற்கு தயார்படுத்தும் வகையில் இரவு பகலாக இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

634 கோடியில்....

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள 634 கோடி பொதுப் பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. தரை தளம் மற்றும் 6 தளங்களில் வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர், நிர்வாக அலுவலகம், 'ஆய்வுக்கூடம்' போன்றவை அமைய உள்கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குளு குளு வசதி

தனியார் மருத்துவமனையை விட நவீன தொழில் நுட்ப கருவிகள், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனை உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முற்றிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த மருத்துவமனையில் ரூ.76 கோடிக்கு நவீன உபகரணங்கள் வாங்கி பொறுத்தப்பட்டுள்ளன.

400 நோயாளிகள்

இங்கு 400 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வகையில் மருத்துவ வசதி உள்ளது. இங்கு மற்ற மருத்துவமனைகளில் இல்லாத உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நரம்பியல்துறை, இருதய நோய் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை. புற்றுநோய்க்கு 3 சிறப்பு பிரிவின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.

புற்றுநோயாளிகளுக்கு

மருந்து மூலம் சிகிச்சை பெறக்கூடிய புற்று நோயாளிகள், அறுவை சிகிச்சை புற்று நோயாளிகள், கதிர்வீச்சு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

சிறுநீரகவியல் துறை

மேலும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை, ரத்தம் சுத்திகரிப்பு (டயாலிசஸ்) செய்தல் போன்ற சிகிச்சை முறைகள் 9 தனி சிறப்பு துறையினர் கீழ் அளிக்கப்படும்.

இது தவிர 3 பரிசோதனை கூடங்கள், எக்ஸ்ரே, நுண்ணு ரியல், உயிர் வேதியியல், நோய் கண்டறிதல் துறையும் இடம் பெறுகிறது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி

இந்தியாவில் எங்கும் கிடைக்காத உயர் மருத்துவ சிகிச்சை இந்த 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் கிடைக்கும்.

புதிய மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு டாக்டர்கள், நர்சுகள், தொழில் நுட்ப துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உபகரணங்கள் பொருத்தப்பட்டன. படுக்கைகள் வரிசையாக போடப்பட்டுள்ளது.

பேட்டரி கார் வசதி

நோயாளிகளை பரிசோதனை கூடங்களுக்கு அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி உள்ளது.

நோயாளிகள் வசதிக்காக 500 தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. நோயாளிகள் மட்டுமே வார்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வார்டுக்கு வெளியே இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு இயக்குநர் நியமனம்

இந்த மருத்துவமனை சுகாதாரத் துறையினர் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில் இயக்குனர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவரது கட்டுப்பாட்டில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை செயல்படும்.

English summary
The Government Multi Super Specialty Hospital at the Omandurar Government Estate, which is all set for inauguration in the next few days, will begin a trial run on Tuesday. Officials said nurses, housekeeping and sanitary workers were already undergoing training. The trial run during the next three days would involve everything from registration of out-patients to testing of equipment. The grand inauguration is expected to be held on February 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X