Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு கேஸ் சிலிண்டர்... மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி.. அதிரடியாக எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கியாஸ் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க 2 அமைச்சகங்கள் இணைந்த 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களின் செயலாக்க அதிகாரிகள் கொண்ட இந்த கட்டுப்பாட்டு அறையை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாறை அறை மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து ஒருங்கிணைப்பு செய்கிறது மத்திய அரசு.

வளைகுடாவில் ஈரானை அமெரிக்கா இஸ்ரேல் தாக்கியதால், பதிலுக்கு அமெரிக்காவையும், வளைகுடாவையும் ஈரான் தாக்கி வருகிறது. ஈரானுக்கு மறைமுகமாக சீனா, ரஷ்யாவின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் கடுமையான பதிலடிகொடுத்து வருகிறது.

இதனால் வளைகுடாவை கடந்து கப்பல்கள் உகல நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால உலக நாடுகள் பலவற்றில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு தரப்பில் தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளது. எனினும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதை உறுதியும் செய்துள்ளது.

gas cylinder Central Government

இந்தியா ஆண்டுதோறும் சுமார் 3.3 கோடி டன் எல்.பி.ஜி.யை பயன்படுத்துகிறது. இதில் 87 சதவீதம் வீட்டு சமையலறைகளிலும், மீதமுள்ளவை ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மொத்த தேவையில், 62 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எல்.பி.ஜி. இறக்குமதி 90 சதவீதம் வரை பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவசரகால நடவடிக்கையாக இந்த வழியாக எண்ணெய் கப்பல் மும்பை வந்துள்ளளது. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் எல்.பி.ஜி. உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் மற்றும் கறுப்புச்சந்தை வியாபாரிகள் இதுபோன்ற தட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார்கள். கடுமையான விலையில் சிலிண்டர்கள் பல்வேறு மாநிலங்களில் விற்கப்படுகிறது. இந்த விவாகரத்தில் கடும்நடவடிக்கை மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இதனிடையே சிலிண்டர் விவகாரத்தில் குழப்பங்களை தவிர்க்கவும், சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்புபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உள்துறை செயலாளர் வழங்கிய அறிவுறுத்தலின்படி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனை கண்காணிக்க அமைச்சகங்கள் இணைந்த குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, இந்த விஷயங்கள் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் இருக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையும் மத்திய அரசால் டெல்லியில் திறக்கப்பட்டு உள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களின் செயலாக்க அதிகாரிகள் கொண்ட இந்த கட்டுப்பாட்டு அறையை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து ஒருங்கிணைப்பு செய்கிறது. மேலும், உண்மைகளை சரிபார்த்து விரைவான நடவடிக்கையை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி வருகிறது. சமூக ஊடகங்களையும் இந்த அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+