தனிக் கட்சி தொடங்கும் ரஜினியை செம ஓட்டு ஓட்டிய திமுகவின் முரசொலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி

  சென்னை: தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்தை திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கலாய்த்து செய்தி வெளியிட்டுள்ளது.

  ரஜினிகாந்த் அரசியலில் வருகிறேன் என அறிவித்துவிட்டார். ஆனால் தனிக்கட்சியை எப்போது அறிவிப்பார் என தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாள் குறிக்கப்படுகிறது.

  ஆனால் கட்சியின் பெயர்தான் வெளியேவரவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சியை அறிவிப்பார் என செய்திகள் பரப்பப்படுகின்றன.

  ஆன்மீக அரசியலுக்கு திமுக எதிர்ப்பு

  ஆன்மீக அரசியலுக்கு திமுக எதிர்ப்பு

  ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலை திமுக தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறது. கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த அன்றே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆன்மீக அரசியலை விளாசியிருந்தார்.

  ரஜினி மீது முரசொலியில் விமர்சனம்

  ரஜினி மீது முரசொலியில் விமர்சனம்

  தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி ரஜினியின் கட்சி அறிவிப்பு இழுத்தடிப்பை கிண்டலடித்துள்ளது. இன்றைய முரசொலி நாளேட்டின் சிலந்தி பதில்கள் எனும் பகுதியில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில்:

  ரஜினியின் கட்சி அறிவிப்பு

  ரஜினியின் கட்சி அறிவிப்பு

  கேள்வி: அரசியலில் குதிக்க உள்ள ரஜினி ஏப்ரலில் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என செய்தி வெளிவந்துள்ளதே?

  பதில்: ஏப்ரல் 1 அன்று அறிவிக்காமல் இருந்தால் சரி!

  ரஜினி-கமல் அரசியல்

  ரஜினி-கமல் அரசியல்

  கேள்வி: ரஜினி- கமல் அரசியல்?

  பதில்: இருவரிடமும் இப்போது 'காலம்' மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK mouthpiece Murasoli criticises Rajinikanth's new political party launch.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற