For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளம்: கோவிலில் முஸ்லீம்கள் தஞ்சம், பள்ளிவாசல்களில் இந்துக்கள் தஞ்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை பாதித்த மழை வெள்ளம் பலதரப்பட்ட மனிதர்களின் மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஜாதி, மதம் பார்க்கவில்லை, ஏழை, பணக்காரன் என்று வித்தியாசமில்லை, எனக்கு எல்லோரும் ஒன்றுதான் என்று வளைத்தது வெள்ளம். எந்த பேரிடர் வந்தாலும் எதிர்கொள்வோம் என்று எதிர்த்து நின்று இயற்கை நிகழ்த்திய போரில் மனிதர்கள் வென்றிருக்கின்றனர்.

மாநிலத்தின் தலைநகரே மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்களுக்கு அடைக்கலமாக மசூதிகள் திறக்கப்பட்டன. சினிமா திரையரங்குகள் தஞ்சமளித்தன. சர்ச்களில் இடம் கிடைத்தன. இதில் தங்கியவர்கள் ஜாதி, மதம் பார்க்கவில்லை. மனிதர்களுக்குள் மதமில்லை என்பதை உணர்த்திய தருணம் அது.

இவர்களுக்கு தொண்டுநிறுவனங்கள் பலவகைகளிலும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இதேபோல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இஸ்லாமியர்களும் தஞ்சம் புகுந்தனர். இந்துக்களும் அங்கே உள்ள மண்டபங்களில் தங்கினர். இப்படி கோவில்களில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் கோவில் மண்டபத்திலேயே தங்கி உணவு சமைத்து பசியாற்றியுள்ளனர். டிசம்பர் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கூட மறந்து போனது பலருக்கும். இந்த தருணத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் நினைவில் இருந்தது.

அடைக்கலம் கொடுத்த பார்த்தசாரதி

அடைக்கலம் கொடுத்த பார்த்தசாரதி

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக நகரை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச்சென்றது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள், அருகில் இருந்த கோவில், சமூக நலக்கூடங்கள், பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்ததால், சென்னை பார்த்தசாரதி கோயிலில் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இஸ்லாமிய தோழர்கள்

இஸ்லாமிய தோழர்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிராம்பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் உணவு தயார் செய்து விநியோகம் செய்தனர். இந்த நிவாரண பணிகளில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர் திரும்பாமல் சென்னைலேயே இருந்துகொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர். இதற்குமுன்னதாக வெள்ளிகிழமையன்று நடைபெற்ற தொழுகையின் பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிராத்தனை செய்தனர். மேலும் அவர்களுக்கு வழங்குவதற்காக நிதி திரட்டும் பணியையும் மேற்கொண்டனர். இதில் அனைத்து இஸ்லாமியர்களும் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்தனர்.

பசியாறிய மக்கள்

பசியாறிய மக்கள்

இந்தப் பேரிடர் மனிதரிடையே இருந்த மத வித்தியாசத்தைக் கூட அகற்றி விட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அங்கே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லை. இப்போது அந்தக் கோவிலில் அவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அண்டாக்களில் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்றினர்.

இணைத்து வைத்த வெள்ளம்

இணைத்து வைத்த வெள்ளம்

வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து விட்டபடியால் வீட்டில் சமையல் செய்ய முடியாமல் தவிக்கும் பிராம்மண குடும்பம், தெருவில்

உணவு கொடுத்துக் கொண்டிருக்கும், இஸ்லாமியத் தோழர்களிடம்வாங்கி பசியாறினர். இந்த வெள்ளம் பலதரப்பட்ட மக்களின் மனங்களை இணைத்து விட்டது.

மசூதிகள் இடமளிப்பு

மசூதிகள் இடமளிப்பு

சென்னை அண்ணா சாலை மசூதி, மண்ணடி மசூதி, வேளச்சேரி மசூதி, தாம்பரம் மசூதி ஆகியவற்றைத் திறந்துவிட்டு மக்களைத் தங்க வைத்துள்ளார்கள். இதைப்போல இந்துக் கோயில்களையும் திறந்துவிட்டிருக்கலாம் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்து சமய அறநிலையத் துறைதான் முடிவெடுக்க வேண்டும் என்பதே பதிலாக உள்ளது.

உடுத்திய துணியோடு வெளியேறிவர்கள்

உடுத்திய துணியோடு வெளியேறிவர்கள்

வெள்ளத்தில் சிக்கியவர்கள் உடுத்திய துணியோடு வெளியேறி இருக்கின்றனர். இவர்களின் உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் உடைகளையும், உணவுகளையும் கொண்டுவந்து கொடுகின்றனர். அரசு கோ ஆப்டெக்ஸ் உடனடியாக ஆடைகளை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்பதும் பலரது கேள்வியாக உள்ளது,

பார்த்தசாரதி கோவில் டிரஸ்ட்

பார்த்தசாரதி கோவில் டிரஸ்ட்

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோவில் உபயதாரர்களால், 'பிருந்தாரண்ய எம்பெருமானார் சேவா டிரஸ்ட்' நடத்தப்படுகிறது. இதன் சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, எம்.கே.பி., நகர், சைதாப்பேட்டை, முடிச்சூர், திருநீர்மலை, துரைப்பாக்கம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, மூன்று நாட்களாக, 30 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன. 'மேலும் சில நாட்கள் இது தொடரும்' என, டிரஸ்ட் அறிவித்துள்ளது.

மனம் நெகிழ்ந்த முன்னாள் மத்திய உளவுத்துறை அதிகாரி!

டிஎன்டிஜே தலைமையகம் வந்து நமது பணிகளை பாராட்டிய முன்னாள் மத்திய உளவுத்துறை அதிகாரி! முன்னாள் ஐபி (இன்டலிஜென்ட் பீரோ) மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியான சகோதரர் மணி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு இன்று 08.12.15 கலை நேரில் வந்தார்.வெள்ள நிவாரணத்திற்கு நம்மிடம் நிதி அளித்து பாராட்டிச் சென்றார். இவரது மகன் கனேசன் அவர்களும் ஐபியில் அதிகாரியாக உள்ளார்.டிஎன்டிஜேவினரால் மத நல்லிணக்கம் தழைப்பதாக தெரிவித்தார். பார்த்த சாரதி கோவிலில் இருந்த இந்துக்களுக்கு உங்களது அமைப்பின் சார்பாக உணவளித்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று தெரிவித்தார்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பகுளம் ஆர்காடு நவாப் என்பவரால் தானமாக கொடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லி எல்லாத்தையும் இருட்டடிப்பு செய்து விட்டதாக ஆதங்கப்பட்டார். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by தவ்ஹீத் ஜமாஅத் on Monday, December 7, 2015

பாராட்டிய அதிகாரி

மத்திய அரசின் உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றியுள்ள மணி, தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு நேற்று 08.12.15 காலையில் நேரில் வெள்ள நிவாரணத்திற்கு நம்மிடம் நிதி அளித்து பாராட்டிச் சென்றார். இவரது மகன் கனேசன் அவர்களும் ஐபியில் அதிகாரியாக உள்ளார்.டிஎன்டிஜேவினரால் மத நல்லிணக்கம் தழைப்பதாக தெரிவித்தார். பார்த்த சாரதி கோவிலில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இஸ்லாமிய அமைப்பின் சார்பாக உணவளித்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் என்றாலே அடுத்தவன் குரலுக்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்று தனி உலகத்தில் வசிப்பார்கள் என்றும் ஒரு பிம்பம் இருந்தது. நகரை விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனித்தனி தீவுகளாக பிரிந்து கிடந்த மனிதர்களை எல்லாம் வெள்ளம் ஒன்று சேர்த்துள்ளது. எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று செல்போன் என்னைக் கொடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் விருந்தினர்களாக சென்றனர்

மனிதநேயப்பணியில் இளைஞர்கள்

மனிதநேயப்பணியில் இளைஞர்கள்

வெள்ளம் பாதித்து இப்போது சகதியாகி முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லாம் வசதிபடைத்தவர்கள், நடிகர்கள் என பலரும் உதவிக்காக குவிந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிசைவாசிகளோடு உணவைப் பகிர்ந்து கொண்டு உண்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஓடி ஓடி செய்கின்றனர்.

காவடி தூக்கியவர்கள் எங்கே போனார்கள்

காவடி தூக்கியவர்கள் எங்கே போனார்கள்

மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் காவடி தூக்கவும், பால் குடம் எடுக்கவும்தானா? மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் இப்போது எங்கே போனார்கள்?என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

English summary
Triplicane Parthasarathy temple. Muslims are staying in temple and also they are preparing food for the flood affected people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X