அச்சுறுத்தும் நாடா புயல்... சென்னை திருவொற்றியூர், மெரினாவில் கடல் சீற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நள்ளிரவு நாடா புயல் கரையை கடக்க உள்ளதால், திருவொற்றியூர், பெசண்ட் நகர், பட்டினம்பாக்கம், மெரினா ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது நேற்று காலை புயலாக மாறியது. நாடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை மழை, வெள்ளம் தாக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. மக்களே இந்த முறை கொஞ்சம் உஷாராகவே இருந்து வருகின்றனர். சென்னையில் நேற்று மாலையில் இருந்தே மக்கள் வெளியில் நின்று மழையை பற்றியும் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றியும் பேசத் தொடங்கி விட்டனர்.

பரவலான மழை

பரவலான மழை

இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ள நாடா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையின், முக்கிய பகுதிகளான, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தியாகராயர் நகர், கிண்டி, கே.கே. நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடல் சீற்றம்

கடல் சீற்றம்

நாடா புயலால் சென்னை மெரினா, பட்டினம்பாக்கம், பெசண்ட் நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு மேலெழுகிறது. இதனால் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் குடியிருக்கும் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். கடல் நீர் வீட்டிற்குள் வராத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாத்து வருகின்றனர். மெரினா கடலில் பொங்கி எழும் கடல் அலைக்களை வேடிக்கைப் பார்க்க பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதும் செல்வதுமாக உள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் சீருடையோடு கூடிய மாணவர்களை பார்க்க முடியவில்லை என்றாலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

படகுகள் தயார்

படகுகள் தயார்

கடந்த ஆண்டு போன்று கோட்டை விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. இதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர் 4 மிதவை மீட்புப் படகுகளுடன் அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீர் வெளியேற்றும் இயந்திரம் தயார்

நீர் வெளியேற்றும் இயந்திரம் தயார்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 35 இடங்களில் தற்போது 10 இடங்களில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 16 சுரங்கப் பாதைகள், நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப் பாதைகளில் உயர் அழுத்த மின் மோட்டார்கள், சூப்பர் சக்கர் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NADA cyclone are bringing heavy rain in Chennai and furious waves in Marina.
Please Wait while comments are loading...