தினகரனை இப்தாருக்கும் கூப்பிடலை, ஜனாதிபதி தேர்தலுக்கும் ஆலோசிக்கலை- நாஞ்சில் சம்பத் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தினகரனை கலந்து ஆலோசிக்காமல் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததற்கு அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது:

இரு ,மூன்று தினங்களாக வலைத்தளங்களிலும் ,ஏடுகளிலும் வந்து கொண்டு இருக்கிற செய்திகள் நெஞ்சில் வேலாகப் பாய்கிறது. டிடிவி தினகரன் ஓரம் கட்டப்படுகிறார், அவரை ஒதுக்கிவைக்க முடிவு, அவரை விரட்ட பொதுக்குழு என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கோடிநிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற டிடிவி தினகரனை வைத்தே இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்கிறது. அவருடைய எச்சிலை எடுத்தே துப்புக்கெட்டவர்கள் அவர் மீது துப்ப முயற்சிக்கிறார்கள்.

அவமானப்படுத்துகிறார்கள்

அவமானப்படுத்துகிறார்கள்

அவருடைய நிழலில் ஒதுங்கி உயிரே வாழ்ந்தவர்கள் அவர் பாதத்திற்கு கீழே பள்ளம் தோண்டுகிறார்கள், அவரை அவமானப்படுத்தவதிலும்,காயப்படுத்துவதிலும் சுகம் காணுகிற இடம் தேடிகள் எல்லாம் சாசுவதம் என்று நம்புகிறார்கள்.

குழிபறிக்க திட்டம்

குழிபறிக்க திட்டம்

மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தது போல வரப்போகிற குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு குழிபறிக்க திட்டமிடுகிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலரும் தான் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அதிகாரம் இருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இப்தாருக்கு அழைப்பு இல்லை

இப்தாருக்கு அழைப்பு இல்லை

இஸ்லாம் மார்க்கம் மானுடத்திற்கு மதிப்பு தந்த மார்க்கம். ஆண்டவனை தொழுவதற்கே பள்ளிவாசலில் இருந்து பாங்கு அழைப்பு வந்தால் தான் தொழுவதற்கு செல்வார்கள். கழகத்தின் சிறுபான்மை பிரிவு நடத்திய இப்தார் விருந்தில் எங்கள் துணைப் பொதுச் செயலருக்கு அழைப்பே இல்லை.

யார் சிறந்த அடிமை

யார் சிறந்த அடிமை

அவரை நெஞ்சம் நிறைய நேசிக்கிற லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் ஏன் எங்கள் தலைவனை நிராககிறீர்கள் என நெஞ்சுடைந்து கேட்கிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச் செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK's Nanjil Sampath opposing to the support for BJP Candidate in the Presidential Election.
Please Wait while comments are loading...