அன்புள்ள காந்தி தாத்தாவுக்கு.. ஒரு கடிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (11.08.2017) மத்திய தகவல் அமைச்சகம், அஞ்சல் துறை சார்பாக, வட்டார அளவில் மகாத்மா காந்தியடிகளுக்கு தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி காரைக்குடி அஞ்சலகக் கோட்டம் மூலம் நடைபெற்றது.

காரைக்குடி அஞ்சலகக் கோட்டம், அஞ்சலக கண்காணிப்பாளர் வே. மாரியப்பன் தலைமை வகித்தார். உதவி கோட்டக் கண்காணிப்பாளர் கே. விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

National letter writing competition held in Karaikudi

காரைக்குடி உபகோட்டம், அஞ்சலக ஆய்வாளர் ரா. இந்திரா மற்றும் வணிக வளர்ச்சி அதிகாரி பி.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டி மாணவர்களுக்கு, காந்தியடிகள் மீது மாணவர்கள் கொண்டுள்ள அன்பும், அவரின் கொள்கைகளின் மீது கொண்டுள்ள ஈடுபாடு வெளிப்படும் வகையில் இருந்தது.

National letter writing competition held in Karaikudi

மேலும் கடிதம் எழுதும் பழக்கத்தை, மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 25,000 , இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும்.

National letter writing competition held in Karaikudi

பட்டதாரி ஆசிரியர் ஆ.கீதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயகாந்தி செய்திருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National letter writing competition was held in Ramanathan chettiyar municipal high school in Karaikudi today.
Please Wait while comments are loading...