For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இடங்கள் அனைத்தையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இடங்களை கலெக்டர் கருணாகரன் அறிவித்துள்ளார்.

Nellai nomination places announced

தொகுதி வாரியாக விபரம் வருமாறு, பாளையங்கோட்டை- நெல்லை மாநகரட்சி அலுவலகம், நெல்லை தொகுதி-நெல்லை ஆர்டிஓ அலுவலகம், அம்பாசமுத்திரம்-சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகம், தென்காசி- தென்காசி ஆர்டிஓ அலுவலகம், வாசுதேவநல்லூர்-சிவகிரி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் தாக்கல் செய்யலாம்.

மேலும், சங்கரன்கோவில்-சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம், ஆலங்குளம்-ஆலங்குளம் தாலுகா அலுவலகம், கடையநல்லூர்-கடையநல்லூர் தாலுகா அலுவலகம், நாங்குநேரி-நாங்குநேரி தாலுகா அலுவலகம், ராதாபுரம் தொகுதி-ராதாபுரம் தாலுகா அலுவலகம். இந்த இடங்களில் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nellai collector announced nomination places in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X