இன்னிக்கு பெட்ரோல், டீசல் விலை எம்புட்டுப்பா.. சொல்வதற்கு வந்துருச்சு புது "ஆப்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை நாள்தோறும் அறிந்து கொள்ள முடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 1 மற்றும் 15-ந்தேதிகளில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

New application has been introduced to know Petrol diesel price

இந்த நடைமுறையை மாற்றி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. முதல் கட்டமாக 5 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதைத் தொடர்ந்து வரும் வரும் 16-ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட உள்ளது.

இதற்காக நாள்தோறும் பெட்ரோல், டீசலின் தினசரி விலையை அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. fuel@ioc என்ற செயலியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New application has been introduced to know Petrol deisel price. Indian Oil Company has introduced a new processor that will enable consumers to know their petrol and diesel prices every day.
Please Wait while comments are loading...