கருணாநிதி அறிவித்த தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு - ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு-ஸ்டாலின்

  சென்னை: தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்றும், திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ் புத்தாண்டு தை முதல்நாளில் கொண்டாடப்படும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  New Year will be on Pongal day: Stalin

  சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

  அப்போது பேசிய ஸ்டாலின், சித்திரை முதல்நாள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் கூறியது பற்றி கவலையில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை கருணாநிதி அறிவித்த தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு. விரைவில் திமுக ஆட்சி உருவாகும் நேரத்தில், கருணாநிதி கொண்டு வந்தபடி, தை முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டமாக உருவாக்கும் நிலை வரும் என்று ஸ்டாலின் கூறினார்.

  தமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை 1. இதை பலர் ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர். தை ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை ஒன்றாம் தேதியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working president M K Stalin today said 'Pongal day' will be declared as Tamil New Year again if his party captured power in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற