For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி ஆயோக்கில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்- வெங்கையா நாயுடு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியுள்ள 'நிதி ஆயோக்"க்கில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Niti Aayog empowers states for development:

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:

திட்டக்கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நிதி ஆயோக் குறித்து அனைத்து மாநில பிரதிநிதிகள், முதல்வர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திய பின்னர் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த அமைப்பு மூலம் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்யும்போது வெளிப்படை தன்மையும், வளர்ச்சியும் தெரியும். ஆனால் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தடுத்து வருகிறது காங்கிரஸ்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

English summary
Union Urban Development Minister Venkaiah Naidu today said that, NITI Aayog will empowers states for development on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X