சிறுதாவூர் பங்களா மட்டும் எப்படியோ தப்பிருச்சே இந்த ரெய்டிலிருந்து!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களிலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனிலும் ஐடி சோதனை நடந்து வரும் நிலையில் சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடைபெறவில்லை.

  இன்று அதிகாலையிலிருந்து சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நிகழ்த்தி வருகின்றனர்.

  No IT raid in Siruthavur Bangalow

  இந்த சோதனையில் ஜெயலலிதா ஓய்வெடுத்து வந்த கொடநாடு எஸ்டேட்டிலும் நடைபெறுகிறது. அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.

  இந்நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சிறுதாவூர் பங்களா பல்வேறு சர்ச்சைகள், மர்மங்களை தன்னகத்தே கொண்டதாகம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த பங்களாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது.

  முன்பு இந்த பங்களாவிலிருந்துதான் ஏகப்பட்ட கண்டெய்னர்களில் பணம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு போகப்பட்டதாகவும் ஒரு மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானதும் நினைவிருக்கலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT officials have conducted raids in Poes Garden, Kodanad Esatate etc. But no raid in Siruvathavur Banglow.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற