குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. விழி பிதுங்கிய அதிகாரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

விளாத்திகுளத்தை அடுத்து ஆற்றங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏ.கந்தசாமிபுரம் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

 No water in Vilathikulam: People blockaded panchayat office

இந்நிலையில் ஏ.கந்தசாமிபுரம் கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாமல் இருந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மோட்டார் பழுதாகி உள்ளதால், மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து மாலை விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை ஏ.கந்தசாமிபுரம் கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஊரக வளர்ச்சி அதிகாரி விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vilathikulam village from Tuticorin has not getting proper water, condemning this people blockaded Panchayat office.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற