For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு 5 பேர் குழு அமைத்த வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும், காங்கிரஸ் கட்சியை வெற்றி கொள்ளும் திறன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாஜக இன்று காலையில் தொடங்கியது.

கூட்டணி பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவில் இடம் பெற்றுள்ள குமாரவேலு, மோகன்ராஜூலு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வானதி ஸ்ரீனிவாசனும் மதிமுக தலைமையகமான தாயகம் வந்திருந்தார்.

மதிமுகவின் ஐவர் குழுவில் உள்ள டாக்டர் இரா.மாசிலாமணி, அ.கணேசமூர்த்தி, இமயம் ஜெபராஜ், புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர், டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆகியோர் வரவேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய வைகோ கூறியதாவது:

கூட்டணி பேச்சு வார்த்தை

கூட்டணி பேச்சு வார்த்தை

கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

காங்கிரஸ் தூக்கி எறியப்படும்

காங்கிரஸ் தூக்கி எறியப்படும்

வரலாறு காணாத ஊழல், 528 மீனவர்கள் படுகொலை, ஈழத் தமிழர்கள் கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தது என பல்வேறு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும்.

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியோடு தேர்தலுக்கு முன்னரோ இல்லை தேர்தலுக்குப் பின்னரோ நேரடியாகவோ, மறைமுகாவோ, கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் மதிமுக கூட்டு சேராது என்றார் வைகோ.

மோடி அலை

மோடி அலை

நாடெங்கும் மோடி அலை வீசுவதாக தெரிவித்த வைகோ, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு பரிமாணம் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் மதிமுக

பாஜக கூட்டணியில் மதிமுக

பின்னர் பேசிய மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "தே.ஜ. கூட்டணியில் மதிமுக இணைய வந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.

மோடி சென்னை வருகை

மோடி சென்னை வருகை

கூட்டணிக்கான பூர்வாங்கப் பேச்சு தொடங்கியுள்ளது, இந்த பேச்சுவார்த்தை தொடரும். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நரேந்திர மோடி சென்னை வரும் போது மதிமுக தலைவர் வைகோ மோடியை நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்.

English summary
MDMK leader Vaiko and B JP president Pon Radhakrishnan have jointly said that a non Congress govt will be formed in the centre after the LS elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X