விஜய் பற்றி.. வாய் திறக்க மறுக்கும் சீமான்.. ரூட்டை மாற்றிய நாம் தமிழர்.. பின்னணி என்ன?
சென்னை: தவெக மற்றும் விஜய் ஆகியோரை தொடர்ச்சியாக விமர்சித்து தேவையின்றி வெளிச்சம் கொடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தவெக களத்தில் செயல்படவில்லை என்பதை அறிந்த சீமான், தேவையின்றி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நாதகவினர் கருதி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலையே தயார் நிலையில் வைத்துள்ளது. சில வேட்பாளர்களுக்கு உரிய தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் களத்தில் வேலையை செய்ய தொடங்கிவிட்டனர். இதனிடையே சமீப காலமாக விஜய் மற்றும் தவெக மீதான விமர்சனத்தை சீமான் குறைத்து கொண்டுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது, சீமான் முதல் ஆளாக வரவேற்றார். ஆனால் கொள்கைத் தலைவராக பெரியாரை அறிவித்ததால், சீமான் எதிர்க்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தவெகவை முதன்மை எதிரியாகவே கருதி சீமான் விமர்சித்து வந்தார். ஆனால் விஜய் தரப்பில் இருந்து சீமானுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் இளைஞர்களை வாக்குகளை பெற திட்டமிட்டு வந்தார். இது நாதகவுக்கு சிக்கலாக மாறியது. ஏனென்றால் நாதகவை ஆதரிப்போரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் தான். விஜய்யின் அரசியல் வருகை சீமானின் அடிப்படையை ஆட்டிப் பார்த்தது. இதனால் விஜய்யை கடுமையாக சாடத் தொடங்கினார் சீமான். நாதக ஆதரவாளர்களும் விஜய் மற்றும் தவெகவை கடுமையாக சாடி வந்தனர்.
ஆனால் கரூர் விவகாரத்திற்கு பின் சீமான் விஜய்யை அதிகமாக விமர்சிக்கவில்லை. கடந்த 2 மாதங்களாகவே தவெக களத்திலேயே இல்லை. இதனால் களத்திலேயே இல்லாத கட்சிக்கு தேவையின்றி ஊடக வெளிச்சத்தை கொடுக்க வேண்டாம் என்று விஜய்யை விமர்சிப்பதை சீமான் குறைத்து கொண்டதாக தெரிகிறது.
அதேபோல் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் தொடர்ந்து அரசியலில் இயங்குவாரா என்பதும் இதுவரை உறுதியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்களை பெரியளவில் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் நாதக பலமாக உள்ள 50 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த சீமான் முடிவு எடுத்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!












Click it and Unblock the Notifications