ரஜினியைவிட ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு அதிகமாம்.. இது லயோலா மாஜி மாணவர்கள் சர்வே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பில் ரஜினிகாந்த்தைவிட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தில் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் ஜூன் 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தி இந்த தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது. மொத்தம் 5874 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

முதல்வர் பதவிக்கு யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்ற கேள்விக்கு அதிகம் மக்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவு

ஸ்டாலினுக்கு ஆதரவு

கருத்து கணிப்பு முடிவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவதற்கு 59% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ஆனால் இருவருக்குமான இடைவெளி என்பது மிகவும் அதிகமாக உள்ளது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் முதல்வராக 11% மக்கள் ஆதரவு தந்துள்ளனர். மேலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 13% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ரஜினிகாந்த்தைவிட பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளதாக இக்கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

முதல்வருக்கு ரொம்ப கம்மி

முதல்வருக்கு ரொம்ப கம்மி

பாமகவின் அன்புமணிக்கு 7% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 1% மக்கள்தான் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.

திமுகவுக்கு வாய்ப்பு

திமுகவுக்கு வாய்ப்பு

தற்போது தேர்தல் நடந்தால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு 47% உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் அதிமுக அணிக்கு 15.4%, பாஜக அணிக்கு 29.7%, பாமக அணிக்கு 5% மக்களும் ஆதரவு தருவதாக கருத்துகளை கூறியுள்ளனர்.

திமுக முதலிடம்

திமுக முதலிடம்

மக்கள் பிரச்னையை தீர்க்கும் திறமையான கட்சிகளில் திமுக முதல் இடத்தில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிமுக 2வது இடத்திலும், பாஜக 3வது இடத்திலும், பாமக 4வது இடத்திலும் உள்ளன.

முன்கூட்டியே தேர்தல்

முன்கூட்டியே தேர்தல்

2019ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று 58.8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியை ஆளுநர் கலைக்க சாத்தியம் உள்ளது என்று 30.2% மக்கள் கருத்து கூறியுள்ளனர். அதேநேரம், தற்போதுள்ள அதிமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக 61 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Pannerselvam gets more support than Rajinikanth reveals Lyola collage former student survey.
Please Wait while comments are loading...