For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்தக் குதிரையை எதிர்த்து சவாரி செய்யப் போகிறார் கமல்?

கமல்ஹாசன் அரசியலில் எந்த குதிரையை எதிர்த்து சவாரி செய்யப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டில் எதுவும் சரியில்லை-கமல்- வீடியோ

    சென்னை : தனது அரசியல் பயணம் ஆன்மிக அரசியல் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நைஸாக பேலன்ஸ் செய்து விட்டார். ஆனால் திராவிட அரசியல் குறித்துப் பேசும் கமல் எந்த குதிரையை எதிர்த்து சவாரி செய்யப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    தமிழக அரசியல் களம் அரசியல் கட்சிகளைத் தாண்டி நடிகர்கள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருவது உறுதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் பற்றி பேசலாம், நிச்சயமாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது என் முடிவைச் சொல்வேன் என்றார் ரஜினி.

    இந்நிலையில் நேற்று முன் தினம் அளித்த பேட்டியில் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் போட்டியிடத் தயார் என்று ரஜினி கூறி இருக்கிறார். 20 வருடமாக தூங்கிக் கொண்டிருந்த ரஜினியின் இந்த அரசியல் சுறுசுறுப்பு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை இல்லாத ரஜினி, கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம், ரஜினியால் பாதிப்பில்லை என்று சொன்னாலும் அவர் குறிப்பிட்ட சதவீதத்திலான வாக்குகளை பிரிப்பது உறுதி.

     யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் ரஜினி

    யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் ரஜினி

    அநேகமாக ரஜினிக்கு விழும் வாக்குகள் அனைத்தும் அதிமுகவின் அதிருப்தி ஓட்டுகளாகத் தான் இருக்கும். இதற்காக ரஜினியால் திமுகவிற்கு பாதிப்பில்லை என்றும் சொல்லிவிட முடியாது. ரஜினி நடத்தும் உறுப்பினர்கள் சேர்ப்பு படலம் முடிந்தால் மட்டுமே அவருக்கான ஆதரவு எந்த கட்சியை சார்ந்தவர்களிடம் இருந்து அதிகம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

     அரசியலில் முந்திய கமல்

    அரசியலில் முந்திய கமல்

    இதனிடையே ரஜினிக்கு முன்னரே அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசனும் பிப்ரவரி 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். கலாம் வீட்டில் இருந்து தனது கனவுகளின் பயணம் தொடங்கும் என்று கமல் கூறியுள்ளார். கமல், ரஜினி சினிமாத்துறையில் எதிர் எதிர் திசையில் பயணித்தது போல அரசியலிலும் எதிர் எதிர் திசையிலேயே உள்ளனர். இவர்கள் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்விக்கு இருவருமே காலம் தான் பதில் சொல்லும் என்று மழுப்பிவிட்டனர்.

     ஆன்மிக அரசியல்வாதி கருணாநிதியுடன் சந்திப்பு

    ஆன்மிக அரசியல்வாதி கருணாநிதியுடன் சந்திப்பு

    ஆனால் தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறி வரலாறு காணாத கொள்கைக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ரஜினி. அது என்ன ஆன்மீ்க அரசியல் என்று கேட்டால், சாதி, மதம் இல்லாத ஆன்மிக அரசியல் என்று நூதனமான விளக்கத்தையும் கொடுத்தார் ரஜினி. அதோடு நிற்காமல் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தனது அரசியல் பிரவேசத்திற்கு ரஜினி ஆசி பெற்று அடேங்கப்பா அரசியல்வாதி என்ற பெயரையும் பெற்று விட்டார்.

     திராவிடம் பேசும் கமல்

    திராவிடம் பேசும் கமல்

    மறுபக்கம் தான் பயணிக்கப் போவது திராவிட அரசியல் என்று கமலின் முந்தைய பேட்டிகள் அனல் பறக்கின்றன. அவர் எந்த கொள்கையை முன் நிறுத்தப் போகிறார் தனது கட்சிக்கு என்பது இன்னும் தெளிவாகவில்லை. திராவிட அரசியல் பேசும் கமல் இதுவரை திராவிட கட்சிகள் சார்ந்த தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை, மாறாக இடது சாரி சிந்தனையுள்ள தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையுமே அதிகம் சந்தித்துள்ளார்.

     கமலின் அரசியல் பாதை எது?

    கமலின் அரசியல் பாதை எது?

    கமல், எல்லோரையும் லேசு பாசாக விமர்சித்து வருகினறார். திமுகவை இதுவரை நேரடியாக தொடவில்லை. பட்டும் படாமல் போய்க் கொண்டிருக்கிறது அவரது பயணம். இதனால் கமல் எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறார் என்ற குழப்பத்திற்கு பிப்ரவரி 21ம் தேதி வரை காத்திருந்தே ஆக வேண்டும். அதன் பிறகாவது தெளிவாகும் என்று நம்புவோம்.

    English summary
    Spiritual politics leader Rajinikanth met Karunanidhi whereas Kamalhaasan highlighting Dravidian politics but sill his stand is not clear on which horse he is going to ride in politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X