For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் செய்வது தீவிரவாதம் இல்லை என்றால்..எது தீவிரவாதம்.. டிவிட்டரில் பொங்கிய பிரகாஷ்ராஜ்

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜும் 'இந்து தீவிரவாதம்' குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பாஜக கடசிக்கு எதிராக சில நாட்களாக பேசி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என பேசியதற்கு ஆதரவாக அவர் தற்போது தனது கருத்தை டிவிட்டரில் பேசியிருக்கிறார். எது தீவிரவாதம் என அவர் கேட்டு இருக்கிறார்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் "அவர் ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 Once again Prakash Raj clashes right-wing groups in twitter

இது பற்றி பேசிய போது எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என பிரகாஷ்ராஜ் கூறினார். இதையடுத்து தற்போது மீண்டும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு கட்டுரையில் இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவாக தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''மதத்தின் பெயரில், கலாச்சாரத்தின் பெயரில் மக்களை பயமுறுத்தும் உங்கள் செயலுக்கு பெயர் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம்'' என்று கேட்டு இருக்கிறார்.

மேலும் அதில் ''மனிதர்க்ளை மத ரீதியாக தாக்குவதும், பசு பாதுகாப்பிற்காக மனிதர்களை கொல்வதும், பெண்களை கலாச்சாரம் என்று கூறி தாக்குவதும் தீவிரவாதம் இல்லை என்றால் எது தீவிரவாதம்'' என்ற வசனம் பொருந்திய புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார். இவர் உருவாக்கிய #justasking ஹேஸ்டேக் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

English summary
Once again Prakash Raj clash with Modi. He frankly started to stand against BJP .Prakash Raj's remarks came a day after right-wing groups criticised actor Kamal Haasan for speaking against 'Hindu extremism'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X