புதிய இந்தியா பிறக்கிறது என்ற அறிவிப்பு என் அடி வயிற்றில் புளி கரைத்தது..

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

  சென்னை: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த ஒன் இந்தியா வாசகர் தனிஷ்ஸ்ரீ பகிர்ந்துள்ள கடிதம்..

  இதே நாள் அன்று : புதிய இந்தியா பிறக்கிறது என்ற அறிவிப்பு என் அடி வயிற்றில் புளி கரைத்தது. மின்னலென வீட்டிற்கு வந்து எல்லா டப்பாக்களையும் ஆராய வைத்தது,. வேறெதற்கு சேமிப்பு வீணாக கூடாதென்ற ஆதங்கம்.

  One india tamil reader Dhanishree has written a letter on demonetization

  என் கண்மணியின் உண்டியல் பணம்தான் எங்களை வாழ வைத்தது , சில்லறை எவ்வளவு முக்கியம் என்று உணர வைத்தது. உழைத்த காசு உண்டியலில் இருந்த உணர்வு , வங்கியில் இருந்த சேமிப்பில் இல்லை. வாராக்கடன் மாதிரி ஒரு வித ஏக்கம்.

  ஆயிரம் , ஐநூறு இருந்தும் ஐந்து, பத்து கொடுத்தவர் எல்லாம் உள்ளத்தில் உயர்ந்தோராயினர். Demonetization என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியை தேடிய நாள். பத்துநாளில் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று பாரத பிரதமர் அறிவித்த போது மனதில் இருந்த மகிழ்ச்சி, மறுதினத்திலிருந்து நாசமாய் போனது நாள்தோறும் நாளிதழ்களை பார்த்து அது சொல்லிய நிகழ்வுகள் பார்த்து.

  எத்தனை நிகழ்வுகள் தள்ளி போனது இறப்பு தவிர. ரேஷன் அரிசிக்கு, இலவச வேஷ்டி சேலைக்கு வரிசையில் நின்ற உணர்வு நான் என் சொந்த பணத்தை எடுக்க வரிசையில் நின்ற போது உணர்த்தியது. ஒரு குழந்தையை பெற்றடுக்க பத்து மாசம் பட டயலாக் போல Demonetization என்ற வார்த்தை ஒரு யுகத்தை தாண்டியும் என் நினைவில் நீளும்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A one india tamil reader Dhanishree has written a letter on demonetization. PM Modi announced Demonetization last year on 8th November.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற