For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் ஒரே ஒரு "மெட்ராஸ்"தான் பாக்கி இருக்கு பாஸ்...!

Google Oneindia Tamil News

சென்னை: இனி "மெட்ராஸ்" என்ற வார்த்தையை அருங்காட்சியகத்தில்தான் காண வேண்டும் போல. நம்மிடையே உலவி வந்த இன்னொரு "மெட்ராஸ்" இப்போது நம்மை விட்டு விலகுகிறது. மெட்ராஸ் ஹைகோர்ட் இனிமேல் சென்னை ஹைகோர்ட் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படவுள்ளது.

மெட்ராஸ் என்ற வார்த்தை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களின் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதை மறுக்க முடியாது. டெல்லிக்கு போகும் தென்னிந்தியர்களைப் பார்த்து இன்றும் கூட மதராசி என்றுதான் அழைக்கிறார்கள்.. அந்த அளவுக்கு "மெட்ராஸ்" தென்னிந்திய மக்களோடு இணைந்து பிணைந்து கிடக்கிறது.

மெட்ராஸ் என்ற வார்த்தை படிப்படியாக தற்போது நீக்கப்பட்டு வருகிறது. அதை முதலில் ஆரம்பித்து வைத்த பெருமை பேரறிஞர் அண்ணாவையே சேரும்.

மெட்ராஸ் ராஜதானி

மெட்ராஸ் ராஜதானி

முன்பு தமிழ்நாட்டுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் சேர்ந்திருந்தபோது அதற்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர். மெட்ராஸ் ராஜதானி என்பார்கள். மாநிலப் பிரிவினைக்குப் பின்னும் கூட மெட்ராஸ் மாகாணம் என்றே இருந்தது. அதை அண்ணாதான் தமிழ்நாடு என்று மாற்றினார். அன்று முதல்- மெட்ராஸ் மறைந்தது.

சென்னையாக மாறிய மெட்ராஸ்

சென்னையாக மாறிய மெட்ராஸ்

அடுத்து திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மெட்ராஸ் என்பதை ஆங்கிலத்திலும் சென்னை என்று மாற்றி உத்தரவிட்டார். இதனால் மெட்ராஸ் முழுமையாக மறைந்து சென்னை என்ற பெயர் வியாபித்தது.

மெட்ராஸ் ஹைகோர்ட்

மெட்ராஸ் ஹைகோர்ட்

இந்த வரிசையில் மெட்ராஸ் ஹைகோர்ட் தற்போது பெயர் மாற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்றமாக உருமாறியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று அளித்தது.

தாய் நீதிமன்றம்

தாய் நீதிமன்றம்

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களுக்கெல்லாம் தாய் நீதிமன்றம் போல உள்ளது சென்னை உயர்நீமன்றம்தான். இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் உயர்நீதிமன்றம் இதுதான். 1862ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாயிலும், கல்கத்தாவிலும் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு மெட்ராஸ்தான் பாக்கி!

ஒரே ஒரு மெட்ராஸ்தான் பாக்கி!

இன்னும் ஒரே ஒரு "மெட்ராஸ்"தான் பாக்கி உள்ளது. அது யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்.. அதாவது சென்னை பல்கலைக்கழகம். ஒரு பக்கம் எல்லாம் தமிழுக்கு மாறுகிறது என்ற திருப்தி வந்தாலும் கூட மெட்ராஸ் என்ற வரலாறும் படிப்படியாக நம்மை விட்டு மறைவது சற்று வருத்தமாகததான் உள்ளது!

English summary
One more Madras is gone. Now Madras HC will be called as Chennai university after the union cabnite approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X