மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா?..இல்லை "டல்" அடிக்குமா??-வீடியோ

  சென்னை: வெளுத்து வாங்க தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தொடர்பாக நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தோம். அவ்வளவுதான் அடித்து ஆடி வருகிறார்கள்.

  மழை இப்படியெல்லாம் கூட தாக்கத்தையும் சிந்தனைகளையும் விதைக்கிறதா? என வியக்க வைக்கிறது. நமது வாசகர்களின் கருத்துகள்:

  மழையால் சந்தோசமே

  மழையால் சந்தோசமே

  Lazourn:

  "மழை"இது ஆசீர்வாதத்திற்கு அறிகுறி; இப்பொழுது பேய ஆரம்பித்திற்கும் இந்த மழையால் சந்தோஷமே.; நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மழை நம்மை உடனடியாக ஒரு மகிழ்ச்சியான மன நிலைக்கு மாற்றிவிடும். மழை சந்தோஷமே

  நெரிசல்தான்

  நெரிசல்தான்

  Karuna Nidhi:

  மகிழ்ச்சி, அனால், போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் தேங்கிய நீர்......சொல்லமுடியாது.......

  பொறுத்து கொள்வோம்

  பொறுத்து கொள்வோம்

  sathish kv:

  மழை என்றாலே ஒரு மகிழ்சி , ஒரு குளிர்ச்சி , சிலிர்ப்பு , எல்லாம். ஒரு வாரம் பொறுத்துக்கொண்டால் அடுத்த ஒரு வருடம் நமக்கு தண்ணீர் தேவை ஈடு செய்யலாம் . மழை என்றாலே மகிழ்சி மட்டுமே .

  குடிநீர் பற்றாக்குறை தீரும்

  குடிநீர் பற்றாக்குறை தீரும்

  Manikandan Kumaravel:

  இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நம் அடிப்படை தேவைக்கு நீர் மிகவும் அவசியம் என்பதை நாம் கற்று அறிந்த ஒன்றே...!!! இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்....!!! மழையால் எனக்கு மகிழ்ச்சியே..!!!

  நீரை சேமிக்கவில்லையே

  நீரை சேமிக்கவில்லையே

  keettavan:

  மகிழ்ச்சிதான்.., ஆனால் நேற்று பெய்த மழைக்கே ஆங்கங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணிர் நிரம்பியுள்ளது நிலத்தடிக்கு செல்லும் மழைநீர் அனைத்தும் வீணாக கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கிறது. எத்தனைமுறை பட்டாலும் அரசு திருந்துவதாக இல்ல மழைநீரை சேமிக்கப்போவதும் இல்லை. மீண்டும் தண்ணீருக்காக கர்நாடக, கேரளவிடமும் கையேந்திதான் நிற்கப்போகிறது.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Here the Oneindia Tamil Readers experience with the North-East Monsoon.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X