For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்தக் காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கு.. ஜி.கே. வாசன் சலிப்பு

Google Oneindia Tamil News

மதுரை : எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை ஜிகே வாசன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கட்சியை உள்ளாட்சி தேர்தலுக்காக பலப்படுத்தும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

Oppostion parties does not unite each other, says GK Vasan

உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் அறிவித்தவுட

ன் கூட்டணி பற்றி அறிவிப்போம். எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் எதிர் கட்சிகள் ஒன்றாக இருந்து இல்லை.

மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. அதை மக்கள் ஓட்டு போடுவதில் காண்பிக்க வேண்டும். தவறு செய்யாதவர்களுக்கு மக்கள் ஓட்டு போடவேண்டும் என்றால் யாருக்கும் வாக்களிக்க முடியாது.

விவசாயிகள் கடன் வசூலிப்பின் போது ஜப்தி நடவடிக்கை கூடாது என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். வறட்சி இல்லை என்று அரசு வழக்கறிஞர் வாதாடுவதை கண்டிக்கிறேன். விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக செயல்படுவதை கண்டிக்கிறோம்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரின் தனிபட்ட செயல்கள் அங்கு வாழும் மக்களை பாதிக்கும். கதிராமங்கலம் மக்கள் மீது முதல்வரே குற்றம்சாட்டுவது நியாயமானது இல்லை.

ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டி உள்ளது. முதல் ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு பிறகு தமாக போராட்டம் குறித்து அறிவிக்கும் என்றார்.

English summary
If a voter should vote only to right doers means, no voting will be done, says GK Vasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X