For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்வா சாப்பிட ஆசையா இருக்கா..?

By Super
Google Oneindia Tamil News

வீட்டுல விசேஷமா..? அப்போ ஸ்வீட் இல்லாம எப்புடிங்க..? நம்ம ஊரு ஸ்பெஷல் அல்வா சாப்பிடுங்க. அல்வானு சொன்னாலே சத்யராஜும், திருநெல்வேலியும் தான் பல பேருக்கு தோணும். அதுக்கும் மேல ஒரு இடம் இருக்கு. நீங்க எங்க இருந்தாலும் அங்கேயே வந்து உங்களுக்கு ப்ரெஷா அல்வா டெலிவரி பண்ணும் ஸ்வீட்கானா.காம்.

திருநெல்வேலி அல்வா வாங்க..

இந்த அல்வால அப்படி என்னங்க இருக்குனு பாக்கலாம். அல்வா பார்க்க பொன்னிறத்தில் ஒரு ஜெல்லி போன்றே இருக்கும். இதை ருசித்து சாப்பிடும் பொழுது, தொண்டைகுழியில் வழுக்கிக்கொண்டு போவது போல் நமக்கே ஒருவிதமாக தோனும். இந்த அல்வா இந்த அளவுக்கு புகழ் பெற்றதுக்கு அப்படி என்ன வரலாறு இருக்கும்..? பார்க்கலாமா..!

Order Tirunelveli Halwa Online and get delivered in less than 24 Hours

இந்த அல்வா ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த மக்களால் செய்யப்பட்டது. இந்த இனிப்பைசெய்யும் அந்த மக்கள் ராஜ்புத்ராஸ் என்று அழைத்தனர். அந்த மக்கள் திருநெல்வேலி ஜமின்தார் அவர்களுக்கு சமையல் செய்ய சொக்கம்பட்டி வந்தனர். அவர்களின் மூலமே அங்கு அல்வா செய்யப்பட்டது.

இந்த அல்வா 19-ம் நூற்றாண்டில் தெரு தெருவாக விற்கப்பட்டது. பின்பு 1882-ம் ஆண்டில் திரு. ஜெகன் சிங் அவர்களால் திருநெல்வேலியில் ஒரு கடை அமைக்கப்பட்டு அதற்கு திருநெல்வேலி அல்வா கடை என்று பெயர் சூட்டினர். இந்த கடை தான் இந்த அல்வாவுக்கு தந்தை என்றே கூறலாம். இந்த அல்வாவிற்கு சலிவா என்ற ஒருவர் அடிமையாகி அவரால் ஆரம்பிக்கப்பட்டதே "இருட்டுக்கடை". இந்த பெயரே தற்போது வரை பெரும் புகழும் பெற்று விளங்குகின்றது.

இந்த கடையிலே அல்வாவின் தரம் உயர்ந்துள்ளது. அன்று முதல் இன்று வரை இந்த இருட்டுக்கடை அல்வாவின் பெயர் சற்றும் குறையவில்லை. இன்னனுமும் இந்த கடையில் 40வாட்ஸ் பல்பே உபயோகப்படுத்தப்படுகிறது.

அல்வாவில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் கேரட் அல்வா, பாதாம் அல்வா, கேசரி அல்வா, வட்டல்ல அப்பம், பைனாப்பிள் அல்வா, பால் அல்வா, பீரூட் அல்வா, தர்போசனி அல்வா, ஆப்பிள் அல்வா, சோளம் அல்வா, பப்பாளி அல்வா, மாம்பழ அல்வா, ரவை அல்வா, பூசணி அல்வா, சேமியா அல்வா மற்றும் பல அல்வா வகைகள் உள்ளன.

அல்வா பெரும்பாலும் கோதுமை மற்றும் சர்க்கரையால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு பொருள். இந்த அல்வா தமிழ் நாட்டில், இந்தியா அளவில் மட்டும் பிரபலம் இல்லை. அல்வா கிழக்கிந்திய நாடுகள், வடக்கு ஆசியா, மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், ஈரோப்பிய நாடுகள், மற்றும் மாளத்திய, அரேபிய நாடுகளிலும் இந்த அல்வா பிரபலம் தான்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் அல்வாவை அலுவா என்று அழைப்பர். இந்த அல்வா கேரள மாநிலத்திலுள்ள கோழிகோட்டில் பிரபலம் இந்த கோழிகோடு அரபிக் கடலுடன் இணைந்திருப்பதால் இதனை அரேபிய நாடுகளில் கோழிகோடன் அல்வா என்று அழைப்பர்.

கர்நாடக மாநிலத்தில் பிராமின் திருமணத்தில் அல்வா பாரம்பரிய இனிப்பு வகைகளில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த அல்வாவின் பெயர் காஷி அல்வா.

இத்தகைய அல்வாவை தயாரிக்க குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். தமிழ் நாட்டில் அல்வா என்றாலே அது திருநெல்வேலி அல்வா தான். இந்த அல்வா ராஜ்புட் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அல்வாவின் செய்முறை என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

1. கோதுமை மாவு : 1 கப்
2. சர்க்கரை : 3/4 கப்
3. ஏலக்காய் : ஒன்று அல்லது இரண்டு
4. முந்திரி மற்றும் உலர் திராட்சை : 50 கிராம்
5. பாதம் / பிஸ்தா : தேவைக்கு ஏற்ப
6. உணவிற்கு சேர்க்கும் கலர் பவுடர் : தேவைக்கு ஏற்ப
7. நெய் : 1 ஸ்பூன்
8. தண்ணீர் : தேவைக்கு ஏற்ப

இப்பொழுது செய்முறையை பார்க்கலாம்..

1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைத்துகொள்ள வேண்டும்.

2. பின்பு வேறொரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்த மாவினை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. 3 மணி நேரம் பிறகு அந்த மாவினை நன்கு பிசைந்து மாவினை வடிகட்ட வேண்டும்.

4. ஒரு கெட்டி வானலியில் நெய் ஊற்றி முந்திரி, உளர் திராட்சை, ஏலக்காய் மற்றும் பிஸ்தா (இருந்தால்) ஆகியவற்றை நன்கு வதக்க வேண்டும்.

5. பின்பு 5 கப் தண்ணீரை மாவில் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

6. கிளறிய மாவு கெட்டி பதத்திற்கு வரும் பொழுது சர்க்கரை மற்றும் கலர் பவுடர் சேர்த்து கிளற வேண்டும்.

7. பதத்திற்கு வந்ததும் தேய் மற்றும் வதக்கிய முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

8. இப்பொழுது ஒரு ஜெல்லி போன்று கொதிக்க ஆரம்பிக்கும்.

9. உடனே அடுப்பிலிருந்து இறக்கி காற்றோட்டமாக வைக்க வேண்டும். பிறகு கிண்ணத்தில் பரிமாறலாம்.

10. இப்பொழுது சூடான இனிப்பான அல்வா தயார்.

என்னங்க இப்போவே சாப்பிட நாக்கில் எச்சில் ஊறுகின்றதா..? இன்னும் யாருக்கு வெயிட் பண்ணறீங்க உடனே ஸ்வீட்கானா.காம் இணையதளத்திற்கு வாங்க ஒரே கிளிக் உங்களுக்கு பிடித்த இந்த அல்வாவை ஆர்டர் செய்து அடுத்த 24 மணி நேரத்தில் சாப்பிடுங்க.

தமிழர்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் வசிக்கின்றனர் அவர்கள் தங்கள் மண் மனம் மாறாத இனிப்புகளை உண்ண விரும்பியும் தங்களுக்கு பிடித்த இனிப்புகளை உண்ண முடியாமல் ஏங்குவர். அத்தகையவருக்கும் இதுதான் சிறந்த வழி. உங்களுக்காக உங்கள் மண் மனம் மாறாத பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் நல்ல தரமானதாகவும், சுவையானதாகவும் கிடைக்கின்றது உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல்.

English summary
SweetKhana.com is the leading Traditional Sweets and Snacks distributor in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X