For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிடிபி 2% வீழ்ச்சியால் ரூ3 லட்சம் கோடி இழப்பு: ப. சிதம்பரம் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.7% ஆக சரிந்துள்ளது. முந்தைய காலாண்டைக் காட்டிலும் இது 0.4% ஆகும்.

P Chidamabram on GDP decline

ஆனால் 2016-17 காலாண்டில் 7.9% ஆக ஜிடிபி இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இந்த அளவு சரிவு ஏற்பட்டது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. உற்பத்தி குறைவு, குறைந்த முதலீடு, வேலைவாய்ப்பின்ன்மைதான் இதற்கு காரணம்.

ஜிடிபி தொடர்பான புள்ளி விவரங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்வைத்த 'மிகப் பெரும் தவறான நிர்வாகம்' என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளன. ஜிடிபி 1% வீழ்ச்சியை சந்தித்தால் ரூ1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்; 2% வீழ்ச்சி ஏற்பட்டால் ரூ3 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.

English summary
Former Union Minister P Chidambaram tweeted that the 1% decline in GDP is a loss of Rs 1.5 lakh crore; 2% decline is a loss of Rs 3 lakh crore in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X