For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான்.. ஆளுநர் ஆய்வு குறித்து ப.சி. டுவீட்

அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான் என்று ஆளுநரின் ஆய்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான் என்றும் அரசு நிர்வாகத்தை பொருத்தவரை ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்றும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

 P.Chidambaram says that CM is the real leader of TN administration

இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கடலூர் வண்டிப்பாளையத்தில் ஆய்வு நடத்த ஆளுநர் சென்ற போது அங்கிருந்த கீற்று மறைப்பில் குளித்து கொண்டிருந்த பெண்ணை பார்த்துவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது.

மேலும் கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். எனினும் இந்த சம்பவங்களை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

இந்நிலையில் இத்தனை சர்ச்சைகளுக்குள்பட்ட தமிழக ஆளுநரின் ஆய்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே. அரசு நிர்வாகத்தை பொருத்தவரை ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே.

ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சம் கொள்வதால்தான் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
EX Finance Minister P.Chidambaram says that Governor is only the 'titular' head of the Executive, not the 'real' head. He tweets about TN Governor's review.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X