For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: 3,000 துணை ராணுவ படையினர் சென்னை வருகை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவப்படை சென்னை வந்து சேர்ந்தது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், வாகன சோதனையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநிலம் முழுவதும் உள்ளூர் போலீசார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுடன் சேர்த்து சுமார் 15 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினர் தமிழகத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

English summary
3000 Central paramilitary forces have arrived so far in Chennai for deployment as part of the lok sabha election bandobust arrangements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X