For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளித் தாளாளரின் பர்த் டே.. இரவெல்லாம் பார்ட்டி .. அடுத்த நாள் லீவு.. பெற்றோர்கள் கொந்தளிப்பு!

Google Oneindia Tamil News

Parents Irked as School Shuts for a Day after Late night Party
சென்னை: சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் தாளாளரின் பிறந்த நாளையொட்டி இரவில் பள்ளிக் கூடத்திலேயே பார்ட்டி நடந்ததால் அடுத்த நாள் பள்ளிக்கு லீவு விட்டுள்ளனர். இதை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளியில் கூடி போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மந்தைவெளியில் செயின்ட் ஜான்ஸ் சீனியர் செகன்டரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு நேற்று பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் திகைப்புக்குள்ளாகினர். காரணம் பள்ளி இன்று விடுமுறை என்று கூறப்பட்டதால். முன்கூட்டியே தகவல் சொல்லாமல் லீவு விடுவதா என்று அவர்கள் குமுறினர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் விசாரித்தபோது அதற்கு முதல் நாள் இரவு பள்ளியில் தாளாளர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாகவும், இரவு நீண்ட நேரம் பர்த்ட டே பார்ட்டி நடந்ததாகவும், இதில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்றும், இதனால்தான் அவர்களுக்கு ஓய்வு அளிப்பதற்காக நேற்று விடுமுறை விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இன்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் எங்களில் பலருக்கும் அது வரவில்லை. காலையில் பள்ளிக்கு வந்தால் பூட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து கேட்டபோது டிசி கொடுத்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என்றனர்.

இன்று காலை பள்ளி தாளாளர் நேரில் வந்து பெற்றோர்களைச் சமாதானப்படுத்தி் பார்த்தார். ஆனாலும் அவர்கள் சமாதானமடையவில்லை. இதனால் போலீஸாரும் வரவழைக்ப்பட்டனர்.

இந்த விவகாரம் காரணமாக அங்கு இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது. இப்பள்ளி சிபிஎஸ்இ பள்ளி என்பதால் இதுகுறித்து தாங்கள் விசாரிக்க முடியாது என்று மாநிலக் கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருப்பினும் விடுமுறை தொடர்பாக மாநில அரசின் விதிமுறைகளை சிபிஎஸ்இ பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ பிராந்திய அதிகாரி சுதர்சன் ராவ் கூறியுள்ளார்.

English summary
Parents and students arriving at the gates of St John’s Senior Secondary School in Mandaveli on Tuesday found themselves shut out, as the school had declared a holiday after a late party the previous evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X