பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா - தீ மிதித்த அதிமுக எம்.பி சத்தியபாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் அதிமுக எம்பி சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் அதிமுக எம்பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

Pariyur Amman Temple festival ADMK MP offer prayer

கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று காலையில் குண்டம் திருவிழா தொடங்கியது. பூச்சாட்டுதலில் இருந்து 15 நாட்கள் விரதமிருந்து, குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கோபி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நந்தா தீபமும், திருக்கோடியும் ஏற்றப்பட்ட பின்னர் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

Pariyur Amman Temple festival ADMK MP offer prayer

இன்று அதிகாலையில் திருப்பூர் லோக்சபா எம்பி சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டம் இறங்கினர். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

கொண்டத்துக் காளியம்மனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pariyur kondhathu kaliyamman temple is one of the famous and ancient one because the name of pari.Kundam festival is one of the most famous festival in Pariyur amman temple. ADMK MP Sathya Bama offer prayer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X