For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறுபடை வீட்டில் ஆட்டை போடப்படும் மயில்கள்... தேசியப் பறவைக்குத் தட்டுப்பாடு

Google Oneindia Tamil News

பழநி: மயில்களுக்கு பெயர் போன பழனியில் தற்போது அவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பழநி மலைக்கோயிலில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, மயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

பழநி மலைக் கோயிலில், மயில், மலைப்பாம்பு, குரங்கு மற்றும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

எங்கு பார்த்தாலும் மயில்கள்:

எங்கு பார்த்தாலும் மயில்கள்:

பழனி மலைப்பாதையின் அனைத்து பகுதிகளிலும் தினமும் ஏராளமான மயில்கள் உலா வருகின்றன.

தேசிய பறவையின் உணவு:

தேசிய பறவையின் உணவு:

அவைகள், தானியம், பழங்கள், சிறிய வகை பூச்சிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

விலை போகும் வண்ண மயில்கள்:

விலை போகும் வண்ண மயில்கள்:

இவற்றால், பிற உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இருப்பினும், மலைப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக சிலர் இவற்றை பிடித்து ஆண் மயிலின் தோகைகளை பறிப்பதுடன் மயில்களை விலைக்கும் விற்கின்றனர்.

அலட்சியப்படுத்தும் வனத்துறை:

அலட்சியப்படுத்தும் வனத்துறை:

கோயில்நிர்வாகமும், வனத்துறையினரும், மயில்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டாததால், அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

திருடு போகும் மயில் தோகைகள்:

திருடு போகும் மயில் தோகைகள்:

மயில்களின் முட்டை, தோகைகளை திருடுபவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பழநிக்கு வந்து செல்லும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

சட்டப்படி குற்றம்:

சட்டப்படி குற்றம்:

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மயில்களை துன்புறுத்துவதும், வேட்டையாடுவதும் குற்றம். மலைக்கோயிலில் மயில்களின், தோகை, முட்டைகளை அபகரிக்கும் நபர்களை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர்" என்றார்.

English summary
Peacock which is our national bird has reduced in numbers. Palani is a living place for peacocks. Nowadays hunters hunted the peacock for its feather and eggs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X