எம்.எல்.ஏ ஆகவே இருந்துக்குறேன்.... தினகரனுக்கு மறுப்பு சொன்ன பெரியகுளம் கதிர்காமு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: மருத்துவர் அணி இணைச்செயலாளர் பதவி வேண்டாம். நான் எம்.எல்.ஏவாகவே மக்கள் பணியாற்றுகிறேன் என கூறி, பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு தினகரன் அளித்த பதவியை மறுத்துள்ளார்.

தினகரன் அரசியலுக்குத் திரும்புகிறேன் என கூறி, தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை ஆகஸ்டு 14ஆம் தேதி மதுரை மேலூரில் இருந்துத் தொடங்குவதாக அறிவித்தார். அதையடுத்து, புதிய நிர்வாகிகளை நியமித்து ஒரு பட்டியலை வெளியிட்டார். ஆனால், தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் என சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர்.

 Periyakulam MLA declined the post which dinakaran gave to him

இந்நிலையில், பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு எனக்கு தினகரன் அளித்த மருத்துவ அணி இணைச் செயலாளர் பதவி வேண்டாம். எனக்கு தனிப்பட்ட பல பிரச்சனைகள் உள்ள காரணத்தால் இந்த பதவியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், அதிமுகவின் மூன்று அணிகளும் இணைந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாக செயல்படும்போது கொடுக்கப்படும் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Peruyakulam MLA not accepted the post which was given by TTV Dinakaran and he said he wanted to serve as MLA.
Please Wait while comments are loading...