மேடை பேச்சுக்கும் தலைமை பண்புக்கும் சம்பந்தம் கிடையாது - தந்தை பெரியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேடையில் நன்றாக பேசுகிறவர் தலைவராகி விட முடியாது. மேடை பேச்சுக்கும் தலைமைப் பண்புக்கும் சம்பந்தம் கிடையாது என பெரியார் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் பேசிய போது கூறினார்.

இன்று, தந்தை பெரியார் ஈ.வே.ராவின் 139ஆவது பிறந்தநாள். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என பல்வேறு சமூக மாற்றங்கள் குறித்து மேடை தோறும் முழுங்கிய பெரியார், மேடையில் ஒருவர் எப்படி பேச வேண்டும் என சேலம் சுயமரியாதை சங்கத்தில் நவம்பர், 1949ஆம் ஆண்டு ஆற்றிய உறையில் கூறியுள்ளார்.

சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத் திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப் பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்க லாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள்.

தங்களுக்குக் கூலி கொடுத்தவர்களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப் பட்ட காரியத்துக்குப் பயன்படுத்த மாட்டான்.

அடுக்கு மொழி தேவையில்லை

அடுக்கு மொழி தேவையில்லை

அடுக்கு அடுக்காகப் பேச வேண்டு மென்றும், அலங்காரமாய்ப் பேச வேண்டு மென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்கு கின்றனர்.

பேச்சால் தலைவனாக முடியாது

பேச்சால் தலைவனாக முடியாது

தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச்சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.

பேச்சுக்கும் தலைமைப் பண்புக்கும் சம்பந்தமில்லை

பேச்சுக்கும் தலைமைப் பண்புக்கும் சம்பந்தமில்லை

தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச்சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.பேச்சுக்கும் தலமைப் பண்புக்கும் சம்பந்தமில்லை

தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவேஇதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.

மக்கள் எல்லா பேச்சுக்கும் ஏமாற மாட்டார்கள்

மக்கள் எல்லா பேச்சுக்கும் ஏமாற மாட்டார்கள்

சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத்தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள்கைக்கோ அல்லது அக்கொள் கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அதுவரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விடமாட்டார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A good Orator never become good leader told Periyar during 1949, November in a meeting in Salem.
Please Wait while comments are loading...