மிஸ்டர் கமல்... இந்துத் தீவிரவாதி அல்ல.. இந்துத்துவா தீவிரவாதி: பீட்டர் அல்போன்ஸ் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை; இந்து தீவிரவாதி என பொதுவாக எந்த ஒரு மதத்தின் பெயராலும் முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

இந்து தீவிரவாதிகள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Peter alphonse on Kamal Haasan's Hindu Terror

இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலில் நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:

நிறத்தின் பெயரில் காவி தீவிரவாதம் என அழைப்பதை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. இந்து தீவிரவாதி என்ற வார்த்தை ஏற்புடையதாக இல்லை. இந்துத்துவா தீவிரவாதி என கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு மதத்தின் பெயராலும் தீவிரவாத முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. அதேபோல் சர்ச்சைக்குரிய கட்டுரையில் கமல்ஹாசன் கூறியுள்ள சில விஷயங்கள் ஏற்புடையதும் அல்ல.

இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior Congress leader Peter Alphonse said that Kamal Haasan should use Hindutva terror not Hindu Terror.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற