For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ: ரிசல்ட் இணையத்தளங்கள் செயல்படவில்லை.. மாணவர்களை பரிதவிக்கவிட்ட கல்வித் துறை

By Siva
Google Oneindia Tamil News

Plus results: Govt. websites leave students in distress
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகளை காண கல்வித் துறை அளித்த இணையதளங்கள் சரியாக செயல்படாத காரணத்தால் மாணவ, மாணவிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாயினர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகள் அரசு இணையத்தளங்களில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை காண அரசு கீழ்வரும் 5 இணையதள இணைப்புகளை வெளியிட்டுள்ளது.

1. http://www.dge3.tn.nic.in/

2. http://www.dge2.tn.nic.in/

3. http://tnresults.nic.in/

4. http://www.dge1.tn.nic.in/

5. http://dge.tn.gov.in/

அந்த இணையத்தளங்களுக்கு சென்றால் அவை சில நேரம் செயல்படுவதும், பல நேரம் செயல் இழந்தும் போயின. அப்படியே அந்த இணையதளங்கள் ஓபன் ஆனாலும் மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணை அதில் கொடுத்து தேர்வு முடிவுகளை பார்க்க முடியவில்லை.

இதனால் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து அரசு இணையதளங்களுக்கு சென்ற மாணவ, மாணவியர்கள் பதட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

அரசு இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவ, மாணவியர் ஒரு மணிநேரமாக பரிதவித்தனர்.

English summary
The links provided by the TN education department to check the +2 results are not functioning properly which leaves the students in utter shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X