• search

மோடியை வரவேற்ற கறுப்பு சென்னை.. அதிகாலை முதலே பரபரப்பு! #GoBackModi

By Mayura Akhilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

   சென்னை: பிரதமர் மோடியின் வருகையால் சென்னை மாநகரத்தில் அதிகாலை முதலே பதற்றம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புக்கொடி போராட்ட அறிவிப்பினால் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

   இந்திய ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.

   மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் காலை முதலே சென்னை மாநகரம் பரபரப்படைந்தது. பிரமரின் வருகையை முன்னிட்டு காலை 11 மணி முதல் 2.30 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சின்னமலையிலிருந்து ராஜ்பவன் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

   மோடி வருகை

   மோடி வருகை

   சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் டெபெக்ஸ்போ-2018 என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். மோடி வருகையால் காலை முதலே சென்னை பெருநகரம் பரபரப்படைந்துள்ளது.

   அதிகாலை முதலே போராட்டம்

   அதிகாலை முதலே போராட்டம்

   சென்னை விமான நிலையம் வரும் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். காலையிலேயே கருப்புக்கொடியுடன் ஆலந்தூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

   துக்க தினம் அனுசரிப்பு

   துக்க தினம் அனுசரிப்பு

   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஒட்டு மொத்தமாக கருப்பு கொடி காட்டி போராடினர். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

   பரபரப்பான சென்னை

   பரபரப்பான சென்னை

   தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைத் தலைவரான இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேச பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திரைப்பட இயக்குநர்கள் அமீர், கவுதமன் உள்ளிட்டோர் இன்று சென்னை விமான நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

   காவல்துறையினர் குவிப்பு

   காவல்துறையினர் குவிப்பு

   கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம், ஐஐடி, அடையாறு புற்று நோய் மருத்துவமனை, திருவிடந்தை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு காரணமாக பிரதமர் மோடியின் சாலை வழிப் பயணம் தவிர்க்கப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவமும் நிகழாமல் மோடி சென்ற பின்னரே சென்னை பெருநகர காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   As sporadic protests by political parties and various groups over the Cauvery issue in Chennai continue, police personnel have cordoned off Thiruvidanthai in Kancheepuram district where Narendra Modi

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more