பிரதமர் மோடிக்கு முதல்வர், ஆளுநர் வரவேற்பு! - ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கிளம்பினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை : முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மணி மண்டபத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கிளம்பினார்.

ராமேஸ்வரத்தையடுத்த பேய்க்கரும்பில் மறைந்த அப்துல்கலாமின் மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார்.

PM Narendra Modi reached Madurai.

தனி விமானம் மூலம் இன்று மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Abdul kalam Memorial opening by PM Modi on 27th July-Oneindia Tamil

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ராமேஸ்வரம் கிளம்பினார். இன்னும் சற்று நேரத்தில் ராமேஸ்வரம் வந்து மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார். அதோடு கலாமின் விஷன் 2020 வாகனத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime minister Narendra Modi reached Madurai by special flight
Please Wait while comments are loading...