டிடிவி தினகரன் ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு திடீர் தடை.. மேடை அகற்றம்.. மன்னார்குடியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடியில் தினகரன் ஆதரவு பொதுக்கூட்டத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு கோஷ்டியினர் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் முறைப்படை போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

Police bans Nanjil Sampath’s public meeting

அதன்பின்னர், பொதுக் கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் மேடை அமைத்துள்ளனர். கொடி மற்றும் பேனர்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத்தில் அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர்பாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மற்றும், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேச இருந்தனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் திடீரென போலீஸ் அனுமதியை ரத்து செய்தது. மேலும், பொதுக் கூட்டத்திற்காகப் போடப்பட்ட மேடை அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police have suddenly banned public meeting, which will be held by Dinakaran supporters in Mannarkudi.
Please Wait while comments are loading...