பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்கவிடாமல் இளைஞர்களை தரதரவென இழுத்துச்சென்ற போலீஸ்!
சென்னை கத்திப்பாரா பாலத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாக கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டுப்போட்டு இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க விடாமல் இயக்குனர் கவுதம்மன் உள்ளிட்டோரை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நாள்தோறும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வட மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு மட்டும் விவசாயிகளின் போராட்டத்தை கண்டும் காணாமல் உள்ளது. இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மெரினாவில் கெடுபிடி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும இளைஞர்கள் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசாரை குறித்து தடுப்புகளை ஏற்படுத்தி கடும் கெடுபிடிகளை காட்டி மாணவர்களை ஒன்று கூடாமால் செய்தது தமிழக அரசு.

போராட முடியாத நிலை
திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட முடியாத நிலை ஏற்பட்டது.

மேம்பாலத்துக்கு பூட்டு
இந்நிலையில் சென்னை கத்திப்பாரா ஜங்கஷனில் திரண்ட இளைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர் கவுதம்மன் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது கத்திப்பார பாலத்துக்கு பூட்டு போட்ட அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

போராடி உடைத்த போலீஸ்
இதனால் 8 போன்ற வடிவத்தில் உள்ள மேம்பாலாம் முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பூட்டை படாதபாடுபட்டு உடைத்து போக்குவரத்துக்கு வழி செய்தனர்.

குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று..
இதையடுத்து மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மாணவர்கள் மறுத்ததால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

செய்தியாளர்களை சந்திக்கக்கூட..
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதம்மன் உள்ளிட்டோரையும் சந்திக்க கூட விடாமல் தரதரவென போலீசார் இழுத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications