போலீஸ் கெடுபிடி.. மதுரை, அண்ணாநகரிலிருந்து பழங்காநத்தம் ஷிப்ட்டான திமுக போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: பணமதிப்பிழப்பிற்கு எதிராக திமுக மதுரையில் அறிவித்து இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தற்போது போலீசுக்கும் திமுக கட்சியினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று பழங்காநத்தம் பகுதிக்கு போராட்ட இடம் மாற்றப்பட்டது.

சென்ற வருடம் நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. அதன் ஒருவருட முடிவில் தற்போது நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் அந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.

 Police doesn't give permission to protest against Demonetisation in Madurai

ஆனால் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் இந்த போராட்டம் நடக்காது என திமுக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மதுரையில் நடக்க இருந்த போராட்டத்திற்கும் பிரச்சனை வந்து இருக்கிறது.

மதுரையில் ஸ்டாலின் தலைமையில்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போலீசார் அங்கு மேடை அமைக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதற்க்கான பேச்சு வார்த்தை தற்போது நடத்து வருகிறது.

மதுரையில் நாளை நடக்கவிருந்த திமுக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் திமுகவினர் குழம்பினர். அண்ணாநகர் பகுதிக்கு பதில் வேறு எங்காவது போராட்டம் நடத்த காவல்துறை திமுகவை அறிவுறுத்தி இருக்கிறது. இதையடுத்து பழங்காநத்தம் பகுதிக்கு போராட்ட களம் மாற்றப்பட்டுள்ளது

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu police doesn't give permission to protest against Demonetisation in Madurai, which is planned by DMK.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற