144 தடை உத்தரவை மீறிய டி.டி.வி.தினகரன், திருநாவுக்கரசர் - போலீஸ் வழக்கு பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவங்கை : தடை உத்தரவை மீறியதாக டி.டி.வி.தினகரன், திருநாவுக்கரசர் உள்பட 68 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது. மருதுபாண்டியர் குருபூஜையில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் தங்கவேலன் உள்பட 68 பேர் மீது சிவங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அக்டோபர் 24ஆம் தேதியும் காளையார்கோவிலில் வரும் 27ம் தேதியும் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. அக்டோபர் 30ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி 23ஆம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை, சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவிட்டுள்ளார்.

Police files case against Dinakaran

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று மருதுபாண்டியர் குருபூஜை நடந்தது. இந்த விழாவில் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்று மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் அதிக கூட்டத்தை கூட்டியதாகவும், காளையார்கோவிலில் 144 தடை உத்தரவை மீறியதாக டிடிவி தினகரன், திருநாவுக்கரசர் உட்பட 68 பேர் மீது சிவகங்கை மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sivagangai district Police filed case against TTV Dinakaran,Tirunavukkarasar for break 144 in Sivaganga district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற