புளியமரத்தில் கார் மோதி விபத்து: திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.

 Police officer dies in accident

இந்நிலையில் வெற்றிவேல் தனது நண்பரின் கார் ஒன்றில் விருதுநகரில் இருந்து திருச்சுழி நோக்கி தனியாக பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் என்ற இடத்தில் வளைவு ஒன்றை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கார் வலதுபுறத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முன்புற கண்ணாடி மீது வெற்றிவேலின் தலை பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police officer dies in accident near arupukottai
Please Wait while comments are loading...