தினகரனுடன் புதுவை எம்பி கோகுல கிருஷ்ணன் சந்திப்பு... முதல்வர் அணியிலிருந்து மீண்டும் பல்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தினகரனுடன் புதுவை எம்பி கோகுல கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இவர் தினகரன் அணியிலிருந்து முதல்வர் அணிக்கு தாவிவிட்டு தற்போது மீண்டும் தினகரன் அணிக்கே சென்றுவிட்டார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கடந்த 21-ஆம் தேதி போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார்.தேர்தல் முடிவுகளின் போது அவர் முன்னிலை வகித்து வரும் போதே பல்வேறு எம்எல்ஏக்கள் தினகரனை போனில் தொடர்பு கொண்டனர் என்பது தெரியவந்தது.

Pondy MP meets Dinakaran

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி மாலை தினகரனின் வெற்றி உறுதியானதும் வேலூர் எம்பி. செங்குட்டுவன் தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்தார். அதேபோல் இன்று புதுவை எம்பி கோகுல கிருஷ்ணனும் தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தினகரன் வெற்றிக்கு பிறகு இரு எம்பிகள் அணி தாவியுள்ளார். இவர்களுள் கோகுலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தினகரன் அணியிலிருந்து எம்பிக்கள் நவநீத கிருஷ்ணன், விஜிலா உள்ளிட்டோர் தாவும் போது கோகுல கிருஷ்ணனும் அணி மாறினார்.

இந்நிலையல் ஆர்கே நகர் வெற்றிக்கு பின்னர் அவர் மீண்டும் தினகரன் அணிக்கே சென்றுவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் இன்னும் 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அணி மாறுவர் என்று தினகரன் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pondicherry MP Gokula Krishnan who was came out from TTV Dinakaran to Edappadi team recently, now he met Dinakaran in his Adyar house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற