For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

​நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்!

​நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி-வீடியோ

    டெல்லி: ​நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அமைப்பான நிதி ஆயோக் கின் நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் உள்ளனர்.

    Prime Minister Narendra Modi raised the issue of simultaneous elections in the NITI Aayog meet

    ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக தெரிகிறது.

    ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதனால் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் செலவினங்கள் குறையும் என தலைவர்கள் வாதிடுகின்றன.

    பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
    எல்லா கட்சிகளும் அரசியலுக்கு மேலாக இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று மோடி தொடர்ந்து மீண்டும் கேட்டுக் கொண்டார்.

    கடந்த ஆண்டு, நிதி ஆயோக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த, இரண்டு கட்டமாக மக்களவை மற்றும் 2024 ல் இருந்து சட்டமன்ற தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டத. ஆனால் இந்த யோசனைக்கு சிறிதளவே ஆதரவு கிடைத்தது.

    ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வசதியாக பொது வாக்காளர் பட்டியலை தயாரிக்க பிரதமர் மோடி ஆலோசனை கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

    பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மாநில அரசுகள் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் என்று பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலைக் கொண்டு வர தேர்தல் ஆணையம், சட்டக் கமிஷன், நாடாளுமன்ற கமிட்டி ஆகியவை யோசனைகளை முன் வைத்துவருகின்றன. ஆனால், அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    இருப்பினும் ஒருவேளை இந்த முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு வசதியாக இந்த பொதுவாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனையை பிரதமர் மோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 23 மாநில முதல்வர்கள், துணைநிலை அளுநர்கள் பங்கேற்றனர்.

    English summary
    Prime Minister Narendra Modi again raised the issue of simultaneous elections at the central and the state level in the NITI Aayog meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X